ருசி…ருசி! சங்கரா டிவியில் சமையல் நிகழ்ச்சி

By Mayura Akilan

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே தனி வரவேற்புதான். தற்போது ஸ்ரீ சங்கரா டிவியிலும் புதியதாக சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியா, பலவகை கலாச்சாரங்கள் பின்பற்றப்படும் பரந்து விரிந்த நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான உணவு பிரஸித்தி பெற்று உள்ளது. இதை கருத்தில் கொண்டு, உங்கள் சங்கரா டிவி 'ருசி ருசி' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

ருசி... ருசி... சமையல் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று வகை வகையாய் சைவ சமையல்கள் சமைக்கலாம்.

பாரம்பரிய சைவ சமையல்

பாரம்பரிய சைவ சமையல்

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் பாரம்பரியமான சைவ உணவு வகைகளை மீண்டும் சமையலறைக்குள் கொண்டு வருவதே. இந்த நிகழ்ச்சியில் பல மாநில மக்கள் எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிடித்ததை சமைக்கலாம்

பிடித்ததை சமைக்கலாம்

பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு பிடித்தமான வகையில் சமையல் செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலத்தின் உணவுகளை தயாரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு காலை 11 மணி முதல் 11.30 ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

நீங்களும் பங்கேற்கலாம்

நீங்களும் பங்கேற்கலாம்

நீங்கள் சமையற்கலையில் ஆர்வம் உள்ளவரா? இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகிறீர்களா? உடனே 080- 40011222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது Ruchi Ruchi Department, Sri Sankara TV, Kamadhenu Telefilms Private Limited, No.8/5, 2 beside More, Newbel Road, RMV 2,stage, Bangalore - 560054. என்ற முகவரிக்கும் எழுதலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X