வங்கிக்கொள்ளையை வைத்து காமெடி படம்.. கோவை சரளா, சரண்யா கலக்கல் காமெடி.. நாளை மதியம்!

சென்னை : சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா மற்றும் கல்பனா இணைந்து நடித்த படம் இன்பா ட்விங்கிள் லில்லி.

இந்தப் படம் கடந்த 2018ல் வெளியான நிலையில் தற்போது நாளைய தினம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்தப் படம் தனியார் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.

சிறப்பான காமெடி நடிகைகள்

சிறப்பான காமெடி நடிகைகள்

நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா மற்றும் மறைந்த நடிகை கல்பனா இவர்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகைகளாக இருந்தவர்கள், இருந்து வருபவர்கள். தொடர்ந்து சரண்யா மற்றும் கோவை சரளா சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர்.

இன்பா ட்விங்கிள் லில்லி படம்

இன்பா ட்விங்கிள் லில்லி படம்

இவர்களை அம்மா உள்ளிட்ட கேரக்டர்களில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இவர்கள் நடிக்கும் படங்களின் வெற்றிக்கு இவர்களும் முக்கிய காரணங்களாக அமைந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்யா, கோவை சரளா மற்றும் கல்பனா இணைந்து நடித்து கடந்த 2018ல் வெளியான படம் இன்பா ட்விங்கிள் லில்லி.

தனியார் சேனலில் ஒளிபரப்பு

தனியார் சேனலில் ஒளிபரப்பு

இந்நிலையில் இந்தப் படம் நாளை பிற்பகல் 2 மணிக்கு பிரபல தனியார் சேனலான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது. நகைச்சுவையுடன் ஆக்ஷன் கலந்த இந்தப் படம் 3 பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் கலாட்டாக்களை இந்தப்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

நிதி திரட்டும் தோழிகள்

நிதி திரட்டும் தோழிகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட சரண்யாவின் பேத்தி அஷ்மிதாவிற்காக மூன்று பேரும் சேர்ந்து பணம் திரட்டுகிறார்கள். அஷ்மிதாவிற்கு தீவிர நோய் பாதிப்பு உள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த நிதியை இவர்கள் சேகரிக்கும் நிலையில், மன்சூர் அலிகான் கும்பல் நடித்து தீவிரவாத தாக்குதலில் இவர்கள் தங்களது பணத்தை இழக்கின்றனர்.

அதிரடி வங்கிக் கொள்ளை

அதிரடி வங்கிக் கொள்ளை

இதையடுத்து வேறு வழியில்லாத சூழலில் தங்களது பணத்தை மீண்டும் பெறும் வகையில் அதிரடியாக வங்கிக் கொள்ளையில் சரண்யா, கோவை சரளா மற்றும் கல்பனா ஈடுபடுகிறார்கள். இந்த சம்பவத்தின்போது ஏற்படும் காமெடி கலாட்டா உள்ளிட்டவை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 பெண்களை மையமாக கொண்ட கதை

பெண்களை மையமாக கொண்ட கதை

பெண்களை மையமாக கொண்ட இந்தக் கதையில் நடித்துள்ள மூவருமே அசாத்திய திறமை கொண்டவர்கள் என்று படத்தின் இயக்குநர் ஆர்கே வித்யாதரன் பெருமை தெரிவித்துள்ளார். எந்த உணர்வாக இருந்தாலும் அதை யதார்த்தமாக தங்களது நடிப்பில் வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்றும் இட்லி (இன்பா, ட்விங்கிள், லில்லி) என்ற இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சரண்யா மகிழ்ச்சி

சரண்யா மகிழ்ச்சி

இந்தப் படம் குறித்து பேசிய சரண்யா, இந்தப் படம் தனது இதயத்திற்கு நெருக்கமான படம் என்று கூறியுள்ளார். எளிமையான கருத்தாக்கத்துடன் பெண்களை முன்னிலைப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிரிப்பை பரிசாக அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X