பூ மாதிரியான நடிகை நமீதா… சரத்குமார் சர்டிபிகேட்
ஏய் படத்தில் நடிகர் சரத்குமாருடன் ஜோடியாக நடித்தவர் சரத்குமார். தந்தி டிவியில் நட்புடன் அப்சரா டாக் ஷோவில் பங்கேற்ற சரத்குமார், நமீதா குண்டான நடிகை கிடையாது. அவரை எளிதாக தூக்கி சுற்றி விடலாம் என்றார்.
'நட்புடன் அப்சரா' பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடத்தும் அப்சரா ஒரு திருநங்கை.
திருநங்கை அப்சரா விற்கு சிம்பு, தனுஷ், திரிஷா என்று நட்பு பட்டியல் அதிகம். இந்த நிகழ்ச்சிக்காக இவர் நமீதா, சிம்பு, தனுஷ், சிம்ரன், அமலாபால், உமா ரியாஸ்கான் போன்ற திரைப்பிரபலங்களை முதல் கட்டமாக சந்தித்து உரையாடியிருக்கிறார்.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை ராதிகா, சரத்குமார் ஆகியோரின் பெர்சனல் பக்கங்களைப் பற்றி ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

ரொம்ப அழகு
சரத்குமாரை ஏராளமானோர் அழகானவர்கள் என்று கூறுவதாக நிகழ்ச்சியில் தெரிவித்தார். நடிகை சரோஜா தேவி அழகா இருக்கேன்னு சொன்னாங்க.நிறைய பேர் அழகன் என்று பாராட்டினார்கள் என்றார் சரத். அதை நிகழ்ச்சி நடத்துனர் அப்சராவும் ஆமோதித்தார்.

கிப்ட் கொடுப்பேன்
உடன் நடிக்கும் எல்லோருக்கும் கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்துவாராம் சரத்குமார். பொக்கே, வைரம், வாட்ச் என நிறைய பரிசுகளை நடிகைகள், இயக்குநர்களுக்கு பரிசளித்துள்ளதாக கூறினார்.

டி.ராஜேந்தரின் ரசிகை
இயக்குநர் ராஜேந்தரை ரொம்ப பிடிக்கும் என்றார் ராதிகா. அவரது வசனங்கள், மிகவும் பிடிக்கும் என்றார்.

பளார் விடுவேன்
பெண்களைப் பற்றி தவறாகப் பேசினால் அடிப்பேன். நிறைய பேரை அடித்திருக்கிறேன் என்றார்.

ராதிகா – சரத் லவ் ஸ்டோரி
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் வந்த காதல் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர். நமீதா விட ராதிகா குண்டுதான் என்றார் சரத்.

தீபிகா படுகோனே
சரத்குமாருக்கு பிடித்த ஹீரோயின் தீபிகா படுகோனேவாம். தீபிகா படுகோனே உடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக கூறினார் சரத்.

சரத் முக்கியமானவர்
நட்பாய் இருந்து காதலானோம். வாழ்க்கையில் நிறைய ஏமாந்துள்ளேன். என் குழந்தைகள். சரத் உடன் இருக்கும் தருணங்கள் மிக முக்கியமானவை.

வாணி ராணி
வாணி ராணி சீரியல் மிகவும் பிடிக்கும். எந்த கதாபாத்திரம் என்றாலும் ராதிகாதான் பெஸ்ட் என்றார் சரத்.

கலாநிதி மாறன்
நிகழ்ச்சியில் கலாநிதி மாறன்,ஜெயராம், பாரதிராஜா பற்றியும்,
ஜெயலலிதா, தீபிகா படுகோனே பற்றியும் சரத், ராதிகா பகிர்ந்து கொண்டனர்.

8 கதாநாயகிகள்
ஒவ்வொரு முறையும் தான் ராதிகாவை விட இளமையானவன் என்று கூறினார் சரத்குமார்.8 கதாநாயகிகளுடன் நடனமாடினார் சரத்குமார். அது கொஞ்சம் பொறாமையாக இருந்தது என்றார்.

தேவாயானியுடன் சரத்குமார்
ராதிகா உடன் திருமணம் நடைபெறா விட்டால் திரிஷா, ரோஜா, மீனா, தேவயானி என யாரை திருமணம் செய்வீர்கள் என்று கேட்டதற்கு தேவயானியை திருமணம் செய்திருப்பேன் என்றார் சரத்.

பிரபு உடன் ராதிகா
அதேபோல பிரபு, கார்த்திக், கமல், விஜயகாந்த் போன்ற ஹீரோக்களில் யாரை திருமணம் செய்வீர்கள் என்று ராதிகாவிடம் கேட்டதற்கு பிரபுதான் சரியான சாய்ஸ் என்றார்.


Click it and Unblock the Notifications











