ஒரே அவமானமா போச்சு.. போட்டியாளர்களை விட ரோஸ்ட்டான கமல்.. அடுத்த சீசன் பிக் பாஸுக்கு அந்த நடிகரா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இடையே கமல்ஹாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் திடீரென வெளியேறி விக்ரம் படத்திற்காக வேலை பார்க்கச் சென்ற நிலையில், சிம்பு ஹோஸ்ட்டாக வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கமல்ஹாசன் பிக் பாஸுக்கு குட்பை சொல்லப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரோஸ்ட் செய்யப்படும் கமல்: ஒவ்வொரு ஆண்டும் போட்டியாளர்கள் மீது தான் அதிகப்படியான நெகட்டிவிட்டி பரப்பப்படும். அதன் காரணமாகவே நடிகர்கள், நடிகைகள் எல்லாம் அந்த ஷோவுக்கு வராமல், வெறும் விஜய் டிவி கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களை வைத்தே நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த முறை வித்தியாசமாக அதிகளவில் கமல் சாரையே ரோஸ்ட் பண்ண ஆரம்பித்து விட்டனர். அவரது ஹோஸ்ட் தான் பெஸ்ட் என சொல்லி வந்த ரசிகர்கள் இந்த முறை அவரால் தான் நிகழ்ச்சியே போரடித்து விட்டது என்றும் மாயாவுக்கு சாதகமாக பேசி வருகிறார். பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதில் பெரும் தவறு செய்து விட்டார் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Sarathkumar will replace with Kamal Haasan for Bigg Boss Tamil 8?

அவரே கடுப்பாகிட்டார்: ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசனுக்கே வர வர போட்டியாளர்களையும் அவர்கள் செய்யும் செயலையும் பார்த்து போர் அடித்து விட்டது என்கின்றனர். அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் மற்றும் அரசியல் என இருக்கும் நிலையில், வெளியேறி விடலாம் என்கிற முடிவுக்கே தற்போது கமல் வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிம்பு இல்லை: கமல் ஒருவேளை வெளியே சென்று விட்டால் அடுத்து சிம்பு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தால் அதற்கும் பெரிய பல்பு கொடுத்துள்ளனர். கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்காக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முழுவதையும் ஒதுக்க போகிறாராம் சிம்பு.

அடுத்த ஹோஸ்ட் இவரா?: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை அதிரடி என்ட்ரி கொடுத்திருந்த சரத்குமார் தான் அடுத்த ஹோஸ்ட் என்கிற பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே கோடீஸ்வரன் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களை அவர் நடத்தி உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நாட்டாமை நல்லாவே நடத்துவார் எனக் கூறுகின்றனர். ஆனால், கமல் அதையெல்லாம் மீறி தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. என்ன முடிவு எடுக்கிறார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X