40 குடும்பங்கள பார்த்தா நான் எப்படி வளர்றது? கவினின் முகத்திரையை கிழிக்கும் சீரியல் இயக்குநர்!

Recommended Video

40 குடும்பங்கள பார்த்தா நான் எப்படி வளர்றது? |கவினை பற்றி டிவிட்டரில் வைரல் வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் சுயரூபம் குறித்து சரவணன் மீனாட்சி இயக்குநர் பேசியது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி சார்பில் பங்கேற்றிருப்பவர் கவின். பள்ளியில் கவி ராஜன் என்றழைக்கப்பட்ட கவின், மீடியாவுக்காக கவின் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்தில் நடித்தார். இதன் மூலம் பெரும் பிரபலமானார் கவின்.

பெண்களை பயன்படுத்தும் கவின்

பெண்களை பயன்படுத்தும் கவின்

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கவின், காதல், பெண்களுடன் கடலை என வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். தனது வெற்றிக்காக வேண்டி பெண்களை ஒரு பொம்மையாகவும் பொருளாகவும் பயன்படுத்தி வருகிறார் கவின்.

தியாகம் செய்கிறார்

தியாகம் செய்கிறார்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நண்பர்களுக்காக தனது வெற்றியை விட்டுகொடுப்பதாகவும் அவர்களுக்காக தியாகம் செய்ய போவதாகவும் டயலாக் பேசி வருகிறார். ஆனால் அவரின் இந்த பேச்சு, அவர் வின் பண்ண மேற்கொண்டுள்ள ஒரு யுக்தி என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவின் வெளியே வந்திடலாம்

கவின் வெளியே வந்திடலாம்

இந்நிலையில் கவின் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலின் இயக்குநர் பிரவீன் பென்னட் கவின் குறித்து யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அது தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அதில் கவின் இனியும் கெட்டப்பெயர் வாங்காமல் வெளியே வருவதுதான் நல்லது. கவின் சரவணன் மீனாட்சி சீரியலின் போது இருந்த கவின் வேறு, இப்போ இருக்கும் கவின் வேறு.

கொஞ்சமும் யோசிக்காமல்

கொஞ்சமும் யோசிக்காமல்

சரவணன் மீனாட்சி சீரியலை முடித்ததற்கு காரணமே கவின்தான். சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் கிடைத்த புகழை வைத்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கிவிட்டான். சரவணன் மீனாட்சியின் மூலம் கவினுக்கு கிடைத்த வேறு விஷயங்களால், சீரியலை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் விலக போவதாக கூறிவிட்டான்.

 நான் எப்படி வளர்றது?

நான் எப்படி வளர்றது?

எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவன் கேட்கவில்லை. இந்த சீரியலை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. அவர்களை யோசித்து பார் என்று கூறியபோதும் கவின் தனக்கு தனது வாழ்க்கைதான் முக்கியம் என்றான். 40 குடும்பங்களைப் பற்றி யோசித்தால் நான் எப்படி வளர முடியும்? நான் எப்படி அடுத்த ஸ்டேஜ்க்கு போவது என கேட்டான்.

மறுத்த கவின்

மறுத்த கவின்

பாரதி கண்ணம்மா சீரியல் வந்தபோது, உன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து சொல்லி வீடியோ போடு என்று கேட்டபோது கூட மறுத்துவிட்டான். வளர்த்துவிட்டதற்கு அந்த உதவியை கூட செய்யவில்லை. நீ மாறுகிறாய் கவின், மாறக்கூடாது, இப்படி இருந்தால் இன்டஸ்ட்ரியின் பெயர் கெட்டுவிடும் என்று கூறினேன்.

காதல் இருக்கு

காதல் இருக்கு

என்னிடம் இருந்தபோது இருந்த கவின் வேறு இப்போது இருக்கும் கவின் வேறு என்றும் கூறினார் இயக்குநர் பிரவீன் பென்னட் அழகர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பாக கவினுக்கு காதல் ஏதும் இல்லையா என்ற கேள்விக்கு எல்லாருக்கும் இருந்திருக்கும். கவினுக்கும் இருக்கு. அவரே கூறியிருக்கிறார். என்றார் பிரவீன் பென்னட் அழகர்.

நடிக்கும் கவின்

நடிக்கும் கவின்

தன்னை வளர்த்துவிட்ட இயக்குநருக்கு கூட நன்றியோடு இல்லை கவின். சரவணன் மீனாட்சி சீரியலை நம்பியிருந்த 40 குடும்பங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று சீரியலை அவசர அவசரமாக முடிக்க காரணமாக இருந்துள்ளார் கவின். அப்படிப்பட்ட கவின் நண்பர்களை பகடைக்காயாக வைத்து கச்சிதமாக விளையாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X