இது எதிர்பார்க்காத டிவிஸ்ட்டாவுல இருக்கு! சேரன் காலில் விழப்போன சரவணன்! நம்ப முடியலையே!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சேரன் காலில் விழுந்து சரவணன் மன்னிப்பு கேட்க போனதை ரசிகர்கள் நம்பவில்லை. நக்கல் என தெரிவிக்கின்றனர்.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை தரக்குறைவாக பேசியதோ டு அடிப்பது போல் நெருங்கி சென்று மிரட்டினார் சரவணன். இதனால் பிக்பாஸ் வீடு அல்லோகளப்பட்டது.
சரவணனின் நடவடிக்கையை பார்த்த மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். சரவணனுக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாதாரண அசிஸ்ட்டன்ட்
இந்நிலையில் இன்று அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், சரவணனை வெளுத்து வாங்கினார். நான் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போதே அவர் சாதாரண அசிஸ்ட்டன்ட் டைரக்டராக என் வீட்டில் சும்மா வந்து உட்காந்திருப்பார்.

சவுக்கடி கொடுத்த கமல்
அந்த உரிமையில் அவரை ஒருமையில் பேசினேன் என்று சரவணன் கூறியதை கேட்டார் கமல்.மேலும் உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்றும் கூறி சரவணனின் திமிர்தனத்துக்கு சவுக்கடி கொடுத்தார் கமல்.

காலில் விழப்போன சரவணன்
இதைத்தொடர்ந்து சேரனிடம் மன்னிப்பு கேட்டார் சரவணன். மேலும் சேரனின் காலில் விழப்போனார் சரவணன்.

கமல் வைத்த முற்றுப்புள்ளி
இதனை சற்றும் எதிர்பாரத சேரன், என்றும் நான் உங்கள் முன்பு அசிஸ்ட்டன்ட் டைரக்டர்தான் என்று கூறினார். ஆக சரவணன் - சேரன் இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கமல்.

ரசிகளுக்கு மகிழ்ச்சிதான்
ஆனால் நேற்று சேரனிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். கேட்க சொன்னால் ஒரு வாரத்தில் வீட்டை விட்டு கிளம்பி விடுவேன் என்றார் சரவணன். இந்நிலையில் இன்று மன்னிப்பு கேட்டிருப்பது உள்ளபடியே ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

நக்கலடிப்பது போல் தெரிகிறது
ஆனாலும் சரவணன் மன்னிப்பு கேட்பது மனபூர்வமாக இல்லை. சும்மா நக்கலடிப்பது போல் மன்னிப்பு கேட்பதாக தெரிகிறது என் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதயத்திலிருந்து வரலையே
அந்த மன்னிப்பு கேலிக்குரியதாக தெரிகிறது. அது அவரது இதயத்திலிருந்து சொல்வது போல் இல்லை என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











