கண்ணியம் காக்கக்கோரிய கமல்.. காலில் விழப்போன சரவணன்.. மீண்டும் கலக்கிய சேரன்!
சென்னை: சேரனை தரக்குறைவாக பேசியது குறித்து கமல் வறுத்தெடுத்ததால் சரவணன் காலில் விழப்போனார்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் டாஸ்க்கின் போது பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட்டாக செயல்பட்டவர்கள் யார் என பிக்பாஸ் கேட்டார். அப்போது சரவணன் கேரக்டராகவே இல்லை என கூறினார் சேரன்.
இதனால் கடுப்பான சரவணன் சேரனை நீ, போ, வா, என்று பேசியதோடு போயா என்றும் கூறினார். இனியும் பேசினால் அப்படிதான்டா பேசுவேன் என்றும் எகிறினார்.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு
அதோடு நிறுத்தினாரா? இல்லை உனக்கு என்ன பிரச்சனை என துண்டை உதறிப்போட்டுக்கொண்டு அடிப்பது போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பாய்ந்தார். இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் மிரண்டுதான் போனார்கள்.

எகிறிய கிரைம் ரேட்
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் சரவணை நார் நாராய் கிழித்து தொங்கவிட்டனர். ஏற்கனவே பஸ்ஸில் பெண்களை உரசிய விவகாரம் என பற்றி எரிந்த நிலையில் இந்த விவகாரமும் சேர்ந்து சரவணன் பக்கம் கிரைம் ரேட்டை ஏற்றியது.

விசாரித்த கமல்
சரவணனை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், சரவணன் - சேரன் இடையிலான பிரச்சனை குறித்து விவாதித்தார்.

நீங்கள் பேசியது தவறு
அப்போது, மரியாதை கொடுத்து மாரியாதை வாங்க வேண்டும் என பொட்டில் அடித்தாற்போல் கூறினார் கமல். சேரனை உரிமையோடு ஒருமையில் பேச அதற்கான உரிமையை அவரிடம் இருந்து நீங்கள் பெறவேண்டும் என்றார். நீங்கள் தரக்குறைவாக பேசியது தவறு என்றார் கமம்.

காலை தொட்டு ஏற்பேன்
உடனே தனது தவறை உணர்ந்த சரவணன் மன்னிப்பு கோரினார். அதற்கு கமல் இது என்னுடைய யோசனைதான் அறிவுரை அல்ல என்றார். நீங்கள் அறிவுரை கூறினாலும் காலை தொட்டு ஏற்றுக்கொள்வேன் என்றார் சரவணன்.

சேரனின் பெருந்தன்மை
பின்னர் பிக்பாஸ் வீட்டின் கிச்சனில் சேரனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கப் போனார் சரவணன். அப்போது எப்போதும் நான் உங்களுக்கு முன்பு அசிஸ்ட்டன்ட் டைரக்டர்தான். நீங்கள் என்னை உரிமையோடு பேசலாம் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் என்று இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். அந்த சூழ்நிலையையும் இயக்குநர் சேரன் மிக பெருந்தன்மையாக கையாண்டார்.


Click it and Unblock the Notifications











