சேரன்கிட்ட சண்டைபோட இதுதான் காரணமா? தன் வாயாலேயே சொன்ன சரவணன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Saravanan Vs Cheran : சேரன்கிட்ட ஏன் சண்டை?..சரவணன் கூறிய காரணம்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சரவணன் சேரனிடம் சண்டை போடுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குநர் சேரன், நடிகர்கள் சரவணன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர்.

அவர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் உள்ளிட்ட 4 பேர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ளவர்களை வைத்து இந்த வாரத்தை நகர்த்தி வருகிறார் பிக்பாஸ்.

சரவணன் கேரக்டராக இல்லை

சரவணன் கேரக்டராக இல்லை

இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்கின் பெஸ்ட் பர்ஃபாமர் மற்றும் வொர்ஸ்ட் பர்ஃபாமர் யார் என கேட்டார் பிக்பாஸ். அப்போது சரவணன் பல இடங்களில் கேரக்டராக இல்லை என்று கூறினார் சேரன்.

தர்ஷன், மதுமிதா

தர்ஷன், மதுமிதா

இதனால் கோபப்பட்ட சரவணன், போயா, நீ, லூசு என சேரனை மரியாதைக் குறைவாக பேசினார். இதனால் பிக்பாஸ் வீடு ரணகளமானது. தர்ஷனும் மதுமிதாவும் நீங்கள் பேசியது தவறு என சரவணனுக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

கவினும் சாண்டியும்

கவினும் சாண்டியும்

போயா என்று சரவணன் கூறிவிட்டு பின்னர் நான் தர்ஷனைதான் சொன்னேன் என பிளேட்டை மாற்றி போட்டார். கவினும், சாண்டியும் அதற்கு ஆமாம் சாமி போட்டனர்.

சேரனை பிடிக்காது

சேரனை பிடிக்காது

வந்த நாள் முதலே சரவணன், சேரனிடம் நார்மலாக பழகவில்லை. ஏதோ பிடிக்காதவரிடம் பேசுவது போன்றுதான் பழகி வந்தார். நிகழ்ச்சியை முதல் முறையாக பார்ப்பவர்களே எளிதாக கண்டுபிடித்துவிடலாம் சரவணனுக்கு சேரனை பிடிக்காது என்று. அப்படிதான் இருந்தது அவரின் நடவடிக்கை.

நடிகராக நடந்திருக்கேனா?

நடிகராக நடந்திருக்கேனா?

இந்நிலையில் இதுகுறித்து வெளியில் உட்காந்து பேசும் போது, கவின், சாண்டிக்கு உள்ள எதிர்ப்புகளை கட் பண்ணிவிட்டு தான் வெளியேறிவிடுவேன் என்றார். மேலும் மதுமிதாவிடம் பேசும் போது நான் இதுவரை உன்னிடம் நடிகராக நடந்திருக்கேனா? ஆனால் அவர் உன்னிடம் டைரக்டராக அவர் நடந்திருக்கிறார். அதனை நானே பலமுறை பார்த்திருக்கேன் என்றார்.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

பின்னர் பேசும் போது தனக்கும் சேரனுக்குமான பகை குறித்து கூறினார் சரவணன். அதாவது 1999ஆம் ஆண்டு திண்டிவனம் அருகே கார் பஞ்சர் ஓட்டுவதற்காக நின்று கொண்டிருந்தாராம் சரவணன். அப்போது அவரை பார்த்துவிட்டு காரில் வந்து இறங்கினாராம் சேரன்.

நீங்கள் நடிக்காத நடிப்பா?

நீங்கள் நடிக்காத நடிப்பா?

இதைத்தொடர்ந்து சரவணனிடம் நலம் விசாரித்தாராம் சேரன். அப்போது சேரனினடம் வாய்ப்பு கேட்டுள்ளார் சரவணன். அதற்கு நீங்கள் நடிக்காத நடிப்பா, நீங்கள் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றுவிட்டீர்கள் என்று கூறினாராம் சேரன்.

20 ஆண்டுகளுக்கு முன்பு

20 ஆண்டுகளுக்கு முன்பு

பின்னர் பெரிய இயக்குநரான பின்பும் கூட தனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார் சரவணன். ஆக 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தற்போது அந்த வன்மத்தை காட்டி வருகிறார் சரவணன்.

சரவணன்

சரவணன்

முன்னதாக நான் ஹீரோவாக நடித்த காலத்தில் சேரன் சாதாரண அசிஸ்ட்டன்ட் டைரக்டராக எங்கள் வீட்டில் வந்து சும்மா உட்காந்திருப்பார் என்றும் சேரனை மட்டம் தட்டி பேசினார். அவரை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறினார் சரவணன்.

வஞ்சம் தீர்க்கும் சரவணன்

வஞ்சம் தீர்க்கும் சரவணன்

இதுநாள் வரை சேரனுக்கும் சரவணனுக்கும் என்ன பிரச்சனை என்று மக்கள் குழம்பியிருந்தனர். இந்நிலையில் சேரனுடன் என்ன பிரச்சனை என்று கூறியிருக்கிறார் சரவணன். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாதராண விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு வஞ்சம் தீர்த்துவருகிறார் சரவணன் என்பது அவர் வாயாலேயே சொல்லியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X