முதல் முறையாக முகத்துக்கு முன் பேசி சேரனை அடிக்கப்பாய்ந்த சரவணன்.. என்னதான் பிரச்சனை உங்களுக்கு?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள சரவணன் இன்று சேரனை அடிக்கப்போவது போல் அவரிடம் நெருங்கிச் சென்றது பீதியை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சரவணனுக்கு ஆரம்பத்தில் இருந்தே சேரனை கண்டால் பிடிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேரனை விளாசி வருகிறார்.
பெரும்பாலும் சேரன் குறித்து முதுகுக்கு பின்னால் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை காட்டிலும் சேரன் என்றால் சரவணனுக்கு ஆகாதவராகதான் உள்ளார்.

சேரனை தூற்றும் சரவணன்
ஆனால் இதுவரை ஒரு நாள் கூட சேரன், சரவணன் குறித்து பின்னால் பேசியதே இல்லை. அதே நேரத்தில் சேரனுக்கு பின்னால் பேசுவதுதான் சரவணனின் முக்கிய வேலையாக உள்ளது. மேலும் சேரனுக்கு ஆகாத மீராவையும் தனது பக்கம் இழுத்துக்கொண்டு அவரை தூற்றினார் சரவணன்.

ஒரே நல்ல காரியம்
இப்போதும் சாண்டி, கவின் உள்ளிட்டோரை தனது கைக்குள் போட்டுக்கொண்டு சேரனை விமர்சித்து வருகிறார். அவருக்கே தெரியாமல் அவர் செய்த நல்ல காரியம் என்னவென்றால் மீரா பிரச்சனையின் போது சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுதான்.

போடா வாடா என்பேன்
இந்நிலையில் இன்றைய புரமோவில் டாஸ்க்கின் போது, விஜயகாந்த் கெட்டப்பில் இருந்த சரவணன் கேரக்டராக இல்லை என கூறினார். உடனே கோபம் கொப்பளிக்க நீங்க கூடதான் ரஜினி கெட்டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறிய சரவணன், போயா வாயா என்றும் இனி போடா வாடா என பேசுவேன் என்றும் கொதிக்கிறார்.

சேரனை அடிக்கப்பாய்ந்த சரவணன்
பின்னர் என்ன உனக்கு பிரச்சனை என்று அடிப்பது போல், சேரனிடம் எழுந்து சென்று மிரட்டுகிறார் சரவணன். இதனை பார்க்கும் போதே அய்யயோ என்ன நடக்கப்போகிறதோ என்ற பீதி ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் சேரன் எப்படி நடந்து கொள்கிறார், சரவணன் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிகிறது.

விஷாலுக்கு எதிர்ப்பு
வெளியில் சரவணன், நடிகர் விஷாலுக்கு ஆதரவாக உள்ளார். சேரன் விஷால் தரப்புக்கு எதிராக உள்ளார். இதன் காரணமாகவே சேரனை கண்டாலே சரவணனுக்கு பிடிக்கவில்லை. சேரன் என்ன கூறினாலும் அதற்கு எதிராகவே பேசி வருகிறார் சரவணன்.

முதிர்ச்சியற்ற சரவணன்
வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்த போதும் பிக்பாஸ் வீட்டில் அதனை ஒரு இடத்தில் கூட காட்டிக்கொள்ளவில்லை சேரன். ஆனால் சரவணன் அந்த நாகரிகம் கூட இன்றி வயசுக்கேற்ற முதிர்ச்சியும் இன்றி சின்னப்பிள்ளை தனமாக வெளியில் உள்ள பிரச்சனையை மனதில் வைத்து சேரனை தனிப்பட்ட முறையில் தாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











