அட பாவமே.. யாரை திருப்திப்படுத்த வெளியேற்றப்பட்டார் சரவணன்? ஒரு பை கூட சொல்ல விடலயே இந்த பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Chithappu got Eliminated: பகிரங்கமாக வெளியேற்றப்பட்ட சித்தப்பு- வீடியோ

சென்னை: இளம் வயதில் பேருந்தில் பெண்களை உரசியதாக கூறிய விவகாரத்தை தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமை நடிகர் கமல்ஹாசன், ஹவுஸ்மேட்ஸ்களுடன் உரையாடினார். அன்றைய நாள் இயக்குநர் சேரன் மீது மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு குறித்த காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது இதையே தவறாக எடுத்துக்கொண்டால் நீங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது, பேருந்தில் அந்தளவுக்கு இடிப்பார்கள் என்பதை போல மீராவிடம் கூறினார் கமல்ஹாசன். உடனே நடிகர் சரவணன், கைகளை உயர்த்தி நானும் பெண்களை உரசியிருக்கிறேன், அதற்காகவே பேருந்தில் சென்றிருக்கிறேன் என்று கூறினார்.

வரவேற்ற பார்வையாளர்கள்

வரவேற்ற பார்வையாளர்கள்

அப்போது சேரன் - மீரா பிரச்சனை முக்கியமானதாக பார்க்கப்பட்டதால் சரவணன் பேசியதில் கமல் கவனம் செலுத்தவில்லை. பார்வையாளர்களும் கைதட்டி சரவணன் பேசியதை வரவேற்றனர்.

நேஷனல் மீடியாக்கள்

நேஷனல் மீடியாக்கள்

ஆனால் சரவணன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாடகி சின்மயி உள்ளிட்டோர் சரவணன் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நேஷனல் மீடியாக்களும் சரவணன் பேசியதையும் அதற்கு எழுந்த எதிர்ப்பையும் ஒளிபரப்பின. விவகாரத்தை உணர்ந்த பிக்பாஸ் கடந்த 29ஆம் தேதி எபிசோடின் போது, சரவணனை தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.

பகிரங்க மன்னிப்பு

பகிரங்க மன்னிப்பு

இதைத்தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை நடிகர் சரவணன், தான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். ஆனால் அதனை சொல்ல நேரம் கிடைக்கவில்லை. நான் சொல்ல வந்தது இதுதான், என்னைப்போல் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று கூறி பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

கன்ஃபெஷன் ரூம்

கன்ஃபெஷன் ரூம்

ஆனாலும் இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டதால், சரவணனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், தேசிய சேனலில் சரவணன் அவ்வாறு பேசியதால் அவர் நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என பிக்பாஸ் குழு முடிவு செய்திருப்பதாக கூறினார்.

டா டா கூட சொல்லல

டா டா கூட சொல்லல

மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்படுவதாக கூறிய பிக்பாஸ், கன்ஃபெஷன் ரூமிலிருந்தே வெளியேறுமாறு கூறினார். சரவணன் தன்னுடன் பழகிய ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கூட டா டா சொல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாமலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சரவணன்.

யாருக்கும் சொல்லாமல்

யாருக்கும் சொல்லாமல்

கடந்த வாரம்தான் பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் சாண்டிக்கும் உள்ள எதிர்ப்புகளை கட் பண்ணிவிட்டு விட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என்றார். ஆனால் யாருக்கும் சொல்லாமலேயே இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் சரவணன்.

பார்வையாளர்கள் அதிர்ச்சி

பார்வையாளர்கள் அதிர்ச்சி

சேரனுடனான பிரச்சனையின் போதே சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இயக்குநர்கள் பலரும் சேரனை மரியாதை இல்லாத அந்த இடத்தில் இருந்து வெளியே அனுப்புங்கள், இல்லையெனில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து நாங்கள் சேரனை வெளியே அழைத்து வர நேரிடும் என்று எச்சரித்திருந்தனர். இந்நிலையில் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X