சரவணன் மீனாட்சி திருமணம் நடக்குமா?

By Mayura Akilan

சரவணன் மீனாட்சி சீரியல் 717வது எபிசோடுகளைக் கடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இது சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகிறது.

சக்தி சரவணன், தங்க மீனாட்சியாக அடுத்த தலைமுறை கதையில் சுவாரஸ்யம் கூடுதலாகவே இருக்கிறது.

தங்கை மீனாட்சியின் கணவன் சரவணன் மீதான கோபம் இன்னமும் தமிழுக்கு இருக்கிறது. இதனால் யாருமே தன்வீட்டுப்பக்கம் கூட வரக்கூடாது என்று கட்டாய உத்தரவிட்டிருக்கிறார்.

ஆனால் மாமன் மகள் தங்க மீனாட்சியை திருமணம் செய்த கனடாவில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு வருகிறான் சக்தி சரவணன்.

மீனாட்சியின் மகன்தான் தான் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மாமன் மகளிடம் பழகி அவளது வீட்டிற்குள் நுழைகிறான். தாத்தா பாட்டியின் ஆதரவோடு இந்த நாடகம் அரங்கேறுகிறது.

மீனாட்சி மனம் கவர்ந்த சரவணன்

மீனாட்சி மனம் கவர்ந்த சரவணன்

தங்கமீனாட்சியின் மனதில் இடம்பிடித்து அவளிடம் தனது காதலை சொல்கிறான் சக்தி சரவணன். அதை அவளும் ஏற்றுக்கொள்கிறாள். தங்கமீனாட்சியின் அம்மாவிற்கு உண்மை தெரியும் என்பதால் இந்த காதலுக்கு அம்மாவின் ஆதரவும் இருக்கிறது.

ஒத்துக்கொண்ட தமிழ்

ஒத்துக்கொண்ட தமிழ்

மகளின் காதலை ஏற்றுக் கொண்ட தமிழ் சரவணனுக்கு தன் மகளை மணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறார்.

தடைகளை தாண்டிய காதல்

தடைகளை தாண்டிய காதல்

சில பல தடைகள், சின்னச் சின்ன ஊடல்கள் என கடந்து சரவணன், மீனாட்சியின் காதல் வெற்றிக்கோட்டை தொட்டுள்ளது.

திருமண நிச்சயம்

திருமண நிச்சயம்

சரவணன் மீனாட்சிக்கு திருமண நிச்சயம் செய்ய முடிவெடுக்கிறார் தமிழ். தனது நிச்சயத்திற்கு உன்னுடைய உழைப்பில் சம்பாதித்து பட்டுப்புடவை வாங்கிக்கொடு என்று சரவணனை கேட்கிறாள் மீனாட்சி.

வேலை பார்த்த சரவணன்

வேலை பார்த்த சரவணன்

பட்டுப்புடவை வாங்குவதற்காக செங்கல் சூளை ஒன்றில் விடிய விடிய வேலை செய்து ரூ. 15000 பணம் சம்பாதிக்கிறான்.

மீனாட்சியின் அழுகை

மீனாட்சியின் அழுகை

தனக்காக வேலை செய்த சரவணனை நினைத்து மீனாட்சிக்கு அழுகை வருகிறது. ஆனால் தன் மனைவிக்கு பட்டுப்புடவை வாங்கித்தரவே தான் பணம் சம்பாதித்தாக கூறுகிறான் சரவணன்.

அன்பரசுவின் வில்லத்தனம்

அன்பரசுவின் வில்லத்தனம்

அதே சமயம், சரவணனைப் பற்றி உண்மையைத் தெரிந்து கொண்ட அன்பரசு இந்த திருமண நிச்சயத்தை நிறுத்த சமயம் பார்க்கிறார். தங்கை மீனாட்சியின் மகன்தான் இந்த சக்தி சரவணன் என்பதை சொல்ல தமிழ் வீட்டிற்கு வருகிறார் அன்பரசு.

திருமணம் நடக்குமா?

திருமணம் நடக்குமா?

தங்கை மகனுக்கு பெண் தரமாட்டேன் என்று சபதம் செய்துள்ள தமிழ் என்ன செய்யப்போகிறார்?. அப்பாவுக்காக மீனாட்சி தனது காதலை விட்டுக்கொடுப்பாளா? தடைகளைத் தாண்டி சரவணன் தனது மாமன் மகளின் கரம் பிடிப்பானா? விறுவிறுப்பான கதையை இனிவரும் எபிசோடுகளில் காணலாம் என்கிறார் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X