»   »  சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்

சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை சீரியல் ஹீரோக்கள், தொகுப்பாளர்கள் இப்போது மளமளவென சினிமா ஹீரோக்கள் ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் சரவணன் மீனாட்சி சீசன் 2 வேட்டையன் கவின். அவருக்கு ஜோடி பீட்சா ரம்யா நம்பீசன்

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் வில்லன் கம் ஹீரோவாகவும், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த கவின், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு 'நட்புன்னா என்னானு தெரியுமா' என்று பெயர் வைத்துள்ளனர்.

கவின் கடந்தாண்டு வெளிவந்த 'இன்று நேற்று நாளை' படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் தற்போது இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

கவின் - ரம்யா நம்பீசன்

கவின் - ரம்யா நம்பீசன்

கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ராஜு, வெங்கி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வனிதா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சிவக்குமார் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் சி.நெல்சனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தரண் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை நடிகர்கள் திரைப்படத் துறைக்குள் நுழைவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், காமெடி நிகழ்ச்சி நடத்திய சந்தானம் சந்தானம், அது இது எது நடத்திய மா.கா.பா ஆகியோர் திரைத்துறையில் நுழைந்துள்ளனர்.

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திக்கேயன் இன்றைக்கு பிரபல நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சந்தானமும் பிரபல காமெடியன் கம் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சரவணன் மீனாட்சி 3வது ஹீரோ

சரவணன் மீனாட்சி 3வது ஹீரோ

சரவணன் மீனாட்சி தொடரின் 2வது சீசனில் சரவணனாக நடித்த இர்பானுக்கு சினிமா வாய்ப்பு வர பாதியிலேயே சீரியலை விட்டு கிளம்பினார். அவருக்கு பதில் இவர் என வேறு சரவணனைப் போட்டனர். அவருக்கும் என்னவானதோ தெரியவில்லை. வேட்டையான நடித்த கவின், மீனாட்சியின் ஜோடியானார்.

ரியோவும் சினிமாவில்

ரியோவும் சினிமாவில்

சரவணன் மீனாட்சி சீசன் 3 ஹீரோ ரியோவும் இப்போது சினிமாவில் நடிக்கப் போகிறாராம். இவராவது மீனாட்சியின் கரம் பிடிப்பாரா? அல்லது பாதியில் போய் வேறு சரவணன் வருவாரா? என்னதான் நடக்குமோ?

English summary
Natpuna Ennanu Theriyuma Tamil Movie Pooja held at Chennai. Kavin, Ramya Nambeesan, Raju, Venky, Sivakumar, Dharan, Ravindar Chandrasekaran graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil