சரவணன் மீனாட்சி கல்யாண நாள் கொண்டாட்டம்

By Mayura Akilan

சரவணன் மீனாட்சி தம்பதியர் வெற்றிகரமான முதல் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி அசத்தினார்கள்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் வெற்றிகரமாக 400 வது எபிசோடினை நிறைவு செய்திருக்கிறது. 400 வது எபிசோடு என்பதோடு சரவணன் மீனாட்சியின் முதல் திருமணநாள் கொண்டாட்டமாகவும் அமைந்தது சிறப்பம்சம்.

நிச்சயதார்த்தம், திருமணம், தலைதீபாவளி, தலைப்பொங்கல் என உற்சாகமாக கொண்டாடிய இந்த தம்பதியர் இப்போது முதலாவது திருமண நாளையும் சந்தோசமாக நேயர்கள் ரசிக்கும் படியாக கொண்டாடினார்கள். இந்த தொடரில் அப்படி என்ன விசேசம் ஒரு சின்ன ரீவைண்ட்.

கிராமத்து காதலி

கிராமத்து காதலி

கல்லிடைக்குறிச்சி கதாநாயகி மீனாட்சிக்கும், சென்னை எப்.எம் ரேடியோவில் வேலை பார்க்கும் கதாநாயகன் சரவணனுக்கும் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் திருமணம் நடக்கிறது.

ஊடல் அதன்பின் கூடல்

ஊடல் அதன்பின் கூடல்

சரவணன் - மீனாட்சி தம்பதியர் இடையே சின்னச் சின்ன ஊடலும், அதோடு கூடலும் நடக்கிறது. இது ரசிக்கும் படியாக இருந்தாலும் நிஜத்தில் எத்தனை தம்பதிகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

சந்தேகத்தில் மீனாட்சி

சந்தேகத்தில் மீனாட்சி

சரவணன் மீனாட்சி இடையே அத்தைப் பெண் மல்லிகா ரூபாத்தில் இடைஞ்சல் வர இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போகிறது. இருவரும் எப்போது பேசுவார்கள் என்று இருக்கையில் கீழே விழுந்து சரவணனுக்கு அடிபடுகிறது. அதில் கொஞ்சநாள் மீனாட்சியை மட்டும் அடையாளம் தெரியாதவன் போல நடித்தான் சரவணன்.

தனிக் குடித்தனம் போன தம்பதி

தனிக் குடித்தனம் போன தம்பதி

ஒருவழியாக நினைவு திரும்பவே இருவரும் வேறு வீட்டிற்கு தனிக்குடித்தனம் செல்கின்றனர் ஆனாலும் சரவணனின் அம்மா குயிலி தன்னுடைய மகனுக்கு தனது கையால்தான் சமைத்து தரவேண்டும் என்று டிபன் கேரியர் சகிதமாக வருவது கொஞ்சம் ஓவர்தான்.

மீனாட்சி வேலைக்குப் போறாளே

மீனாட்சி வேலைக்குப் போறாளே

தனிக்குடித்தனம் வந்த கையோடு ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தில் வேலைக்குப் போக முடிவு செய்கிறாள் மீனாட்சி. நல்ல வேலை கிடைக்கவே வேலைக்கும் போகிறாள்.

மல்லிகாவின் எண்ணம்

மல்லிகாவின் எண்ணம்

சரவணனை எப்படியாவது மீனாட்சியிடம் இருந்து பிரித்துவிடவேண்டும் என்று திட்டம் போடும் மல்லிகா, மீனாட்சி வேலைக்கு போனால் கண்டவர்கள் எல்லோரும் பேசுவார்கள் என்று பீதியை கிளப்புகிறாள். அதை கேட்டு லேசாக சந்தேகம் கிளம்புகிறது சரவணனுக்கு.

மீனாட்சியின் அண்ணன்

மீனாட்சியின் அண்ணன்

இவர்கள் இப்படியிருக்க மீனாட்சியின் அண்ணன் வாழ்க்கையில் புயல் வீசுகிறது. சரவணனின் அக்காவைத்தான் மீனாட்சியின் அண்ணன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்த பிரச்சினை மீனாட்சியின் வாழ்க்கையை பாதிக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் சொல்வார்கள்.

முதல் திருமண நாள்

முதல் திருமண நாள்

சரவணன் மீனாட்சி ஒருவழியாக முதலாவது திருமணநாளினை 400 வது எபிசோடில் கொண்டாடி விட்டார்கள். திருமணத்திற்குப் பின்னர் குழந்தை இல்லாத குறையை வைத்துதான் கதையை நகர்த்துவார்கள். இந்த கதையும் அதை நோக்கித்தான் நகர்கிறது. இன்னும் எத்தனை எபிசோடுகள் நகர்த்துகிறார்கள் என்று பார்க்கலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X