சரவணன் மீனாட்சிக்கு நடுவில புதுசா யாரு?
சரவணன் மீனாட்சி தம்பதியருக்கு இடையே புதிதாக ஊர்வசி என்ற பெண் நுழைந்துள்ளதால் மீனாட்சியின் கோபம் அதிகரித்துள்ளதாம். ரசிகர்களே அவசரப்படாதீங்க. இந்த ஜோடி இப்போது விளம்பரத்திலும் இணைந்து கலக்கி வருகிறது. ஊர்வசி சோப் விளம்பரத்தில் சரவணன் பேசும் வசனம்தான் மீனாட்சியை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம்.

சரியான ஜோடி பாராட்டுக்கள் கோடி...
சினிமாவோ சீரியலோ ஜோடிப்பொருத்தம் சரியாக இருந்தால் ரசிகர்களிடையே அந்த ஜோடி வெற்றி பெற்று விடுவார்கள். எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி, சிவாஜி - பத்மினி, அஜீத் - ஷாலினி, கார்த்தி - காஜல் அகர்வால் போன்ற ஜோடிகள் உதாரணம். இதே போல் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி செந்தில் - ஸ்ரீஜா ஜோடி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளனர்.

கல்யாணம் தொடங்கி தலைதீபாவளி வரை…
சரவணன் மீனாட்சி தொடரில் ஒவ்வொரு நிகழ்வும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கல்யாணம், தலை தீபாவளி என ஒவ்வொன்றையும் நம் வீட்டில் நடக்கும் விசேசம் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நேசமான ஜோடி
இந்த ஜோடி இப்போது விளம்பரத்திலும் ஜோடி சேர்ந்துள்ளது. ஊர்வசி சோப் விளம்பரத்திற்காக இவர்கள் பேசும் வசனம்தான் டாப். வாழ்க்கையில சில சமயங்களில் ஏற்படுற கரை சில சமயங்களில் மறையாது. மீனாட்சி எவ்ளோ முயற்சி செஞ்சும் அவளால முடியலை. ஆனா ஊர்வசி வந்ததுக்கு அப்புறம் எல்லாம் பளிச்சின்னு மாறிடுச்சு என்கிறார் சரவணன். இதை கேட்டதும் மீனாட்சிக்கு கோபம் வராதா என்ன?

கோபமான மீனாட்சி
சரவணன் காபியை சட்டையில் கொட்டிக் கொள்கிறான். உடனே மீனாட்சியை கூப்பிடவே, அவள் கோபமாக அதான் உங்க ஊர்வசி வந்தாச்சே அப்புறம் நான் எதுக்கு என்கிறாள் மீனாட்சி. சீரியலுக்கு மட்டுமல்ல சோப் விளம்பரத்திற்கும் இந்த ஜோடி சூப்பர்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

சரவணன் மீனாட்சிக்கு பெண் குழந்தையா?
இதென்ன புதுக் கதை என்கிறீர்களா? இதுவும் விளம்பரம்தான். சரவணன் மீனாட்சி தம்பதியருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் பெண் குழந்தை இருப்பது போல விளம்பரம் எடுத்துள்ளனர். எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரை மீதுதானே பந்தயம் கட்ட முடியும் என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர் விளம்பர தயாரிப்பாளர்கள்.

விளம்பரத்திற்கு ஏற்ற ஜோடி
இதேபோல் சினிமாவில் சூப்பர் ஜோடிகளான கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடி ப்ரூ காபி விளம்பரத்தில் இணைந்து நடிக்கும் விளம்பரமும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











