Bigg Boss 3 Tamil: துள்ளுவதோ இளமை - சரவணன் மீனாட்சி கிரஷ்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 வீட்டில் வசிப்பவர்களில் அபிராமி வந்த அடுத்த நாளே கவின் மீது கிரஷ் பத்தி பேசினது நம்பும் படியா இல்லைன்னாலும் காரணம் சொல்வது நம்பும்படி இருக்கு.
திங்கள் கிழமை இரவே அபிராமி கார்டனில் உட்கார்ந்து இருக்க, அவரை சுற்றி ஷெரின், சாக்ஷி இருக்கிறார்கள்.
அப்போதுதான் கவின் மீது தனது கிரஷ் பத்தி சொல்றார் அபிராமி.

எனக்கு பிடிக்காது
அம்மா எப்ப பார்த்தாலும் சீரியல் பார்த்துகிட்டு இருப்பாங்க. எனக்கு பிடிக்கவே பிடிக்காது.ஒரு நாள் சரவணன் மீனாட்சி சீரியல் அம்மா கூட உட்கார்ந்து பார்த்தேன்.அதில் கவின் வேட்டையானா நடிச்சு இருப்பான். அவனைப் பார்த்ததுமே எனக்கு அவன் மேல கிரஷ் வந்திருச்சு. அப்புறம் ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம். என்னை ரொம்ப நல்லாவே அவனுக்கு தெரியும்.இப்போ நடிக்கிறான்னு சொன்னார்.

சொன்னியா அவன்கிட்ட
இதை மூவரும் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்க, உன் கிரஷ் பத்தி அவன்கிட்ட சொன்னியான்னு ஷெரின் கேட்க, மரமண்டை ஒண்ணுமே புரிஞ்சுக்க மாட்டேங்குது.ஏதாவது பேசினால், இல்லடா மச்சான்னு கலாய்க்குதுன்னு சொன்னார். பிக் பாஸ் கேமிராகிட்ட வந்து உனக்கெல்லாம் கனி மொழி தேன்மொழின்னு கிராமத்துல சுத்திகிட்டு இருப்பா.அவதாண்டா உனக்கெல்லாம்.. நான் செட்டாவ மாட்டேன்னு ரொம்ப மெதுவா பேசினார்.

சமரசம் மறுநாள்
மறுநாள் பாத்ரூமில் அபிராமி, ஷெரின், சாக்க்ஷி உட்கார்ந்து இருக்க, அங்கு வந்த கவின்,எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க...துள்ளுவதோ இளமை படம் என்ன சொல்றதுன்னு இவன் சொல்ல, பார்த்தியா இப்போ கூட என்கிட்டே இருந்து இவன் எஸ்கேப்பாகப் பார்க்கிறான்னு அபிராமி கோவத்தில் எழுந்து போறாங்க. சரி சொல்லு.. எனக்கெல்லாம் நேரடியா பேசினாத்தானே புரியும்னு கவின் சொல்றார்.

சரவணன் மீனாட்சி சொல்லலை
அம்மா கூட சரவணன் மீனாட்சி பார்த்து உன் மேல கிரஷ்ன்னு சொல்லலைனு கேட்கறாங்க. இப்போதுதான் நாம பார்த்து இருக்கோம். இன்னும் 10 நாள் அல்லது 15 நாள் போகட்டும் ரெண்டு பேரும் எப்படின்னு புரிஞ்சுகிட்டு இது பத்தி பேசலாம் என்று சமரசம் செய்ய்யறார் கவின். பிக் பாசில் மட்டும் முதல் நாளே பயமில்லாமல் லவ்வை சொல்லிடறாங்களே எப்படி?


Click it and Unblock the Notifications











