என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா? இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களா?

By Mayura Akilan

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது சில நேரங்களில் சிலருக்கு நடக்கும் போல. இந்த ரீல் இப்போது சரவணன் மீனாட்சி தொடரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் கலக்கல் ரொமான்ஸ் தொடர் 'சரவணன் மீனாட்சி திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்னரும் சரி, சரவணன் மீனாட்சியின் ரொமான்ஸ் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருந்தது.

இடையில் யார் கண் பட்டதோ, இந்த ஜோடிக்கு சண்டை அதிகமாகி பிரிவு நிலைக்கு வந்து விட்டது. இப்போது சரவணன் கரண்ட் ஷாக் அடித்து விழுந்து மீனாட்சியை மட்டும் மறந்து விட்டான். அது என்னவோ எல்லோரையும் தெரிகிறது மீனாட்சியை மட்டும் யார் என்று நினைவில் இல்லை.

காதல் உணர்வு ஜெயிக்கும்

காதல் உணர்வு ஜெயிக்கும்

சரவணனுக்கு பழைய சம்பவங்களை நினைவு படுத்தினால் மீனாட்சியின் ஞாபகம் வந்து விடும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை தான் செய்யப்போவதில்லை என்று மீனாட்சி உறுதியாக இருக்கிறாள். காரணம் உண்மையான உணர்வு ஜெயிக்கும். அது சரவணனுக்கு தன்னை அடையாளம் காட்டும் என்கிறாள் மீனாட்சி.

குயிலி அட்டகாசம் தாங்கலையே….

குயிலி அட்டகாசம் தாங்கலையே….

சரவணனின் அம்மாவான குயிலி, மூன்றாம் பிறை கமல் போல நடிப்பது கொஞ்சம் ஓவர்தான். ஆனால் நேற்று விஸ்வரூபம் கமல் போஸ்டரை காண்பித்து இது யார் என்று கேட்க அது சிவாஜி என்று கூறுகிறார் சரவணன்.சிவாஜிதான் செத்துட்டாரேப்பா என்று சரவணனின் அப்பா ராபர்ட் ராஜசேகர் கூற என்னது சிவாஜி செத்துட்டாரா? என்று கேட்டு சரவணன் கொடுக்கும் ரியாக்சன் செம காமெடி( இது ஏற்கனவே நகொபகா பட டயலாக் காப்பிதான்).

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, கட்டபொம்மன் வரைக்கு ரீவைண்ட் போகிறார் சரவணன். சரவணனுக்கு நினைவூட்டல் சம்பவங்கள்தான் கடந்த இரண்டு நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இதில் அலுவலக நண்பர்கள் வந்து நடனம் ஆடியும் எந்த நினைவும் வரவில்லை. அது எப்படி மீனாட்சியை தெரியாமல் மீனாட்சியின் அப்பா, அண்ணன் ஆகியோரை அடையாளம் தெரிகிறது என்று தெரியவில்லை.

கதையை கொண்டு போக தெரியலையா?

கதையை கொண்டு போக தெரியலையா?

350 எபிசோடு வரை போயாகிவிட்டது. சரவணன் மினாட்சி திருமணம், அக்கா அண்ணன் திருமணம் வரை விறுவிறுப்பாக ஜாலியாக போன தொடர் இப்போது நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டது. கதையை நகர்த்தத் தெரியாமல் கஷ்டப்பட வேண்டாம் டைரக்டர் சார். மக்களின் ரசனை மாறும் முன்பே சீக்கிரம் சீரியலை முடிச்சிருங்க

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X