சரவணன் – மீனாட்சி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிருச்சாமே?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் - மீனாட்சி தொடர் ஜோடி செந்தில்-ஸ்ரீஜா பற்றிதான் மீடியாக்களில் பரபரப்பு டாக். செல்லக் கொஞ்சலுமாய், சின்னச் சண்டைகளாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மதுரை சீரியலில் ஜோடி சேர்ந்த செந்தில், ஸ்ரீஜா அப்புறம் இணைந்தது சரவணன்-மீனாட்சி தொடரில்தான். காதல், நிச்சயதார்த்தம், திருமணம், தலைதீபாவளி என அனைத்தையும் ரியலாக செய்து அமர்க்களப்படுத்திவிட்டனர்.
இதெல்லாம் பார்க்கும் போது இது ஏதோ சீரியலுக்காக மட்டுமல்ல நிஜத்திலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிவிட்டது என்றே பேச்சு அடிபடுகிறது.

ரொமான்ஸ் ஜோடி
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருப்பது சரவணன் மீனாட்சிதான். இதில் இருவரின் நடிப்பிலும் கூடுதலாக ரொமான்ஸ் இழையோடும்.

மதுரை ஜோடி
மிர்ச்சி செந்திலும் ஸ்ரீஜாவும் முதலில் ஜோடி சேர்ந்தது மதுரை சீரியல்தான். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக நடித்து அது செட் ஆகவில்லை.

மீண்டும் இணைந்தனர்
மதுரை சீரியலில் அந்த ஜோடியின் பெயர் சரவணன் மீனாட்சி. அதுவே அடுத்த தொடரின் தலைப்புக்கு பெயராகிவிட்டது. சீரியல் ரசிகர்கள் மனதிலும் நிலைத்துவிட்டது.

விளம்பரத்திலும் ஜோடி
சீரியல் ஜோடி ஹிட் ஆகிவிட்டதால் விளம்பரத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்துள்ளனர். அதுவும் ஹிட்தான்.

சினிமாவிலும் ஜோடி
சீரியல், விளம்பரத்தில் ஜோடி சேர்ந்த உற்சாகத்தோடு சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளனர். படத்தின் பெயர் ‘கடலை'. கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை இயக்கிய மூர்த்திதான் இந்த ஜோடியை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

ஸ்ரீஜாவுக்கு அட்வைஸ்
சினிமா, சீரியல் என செந்தில் கலந்து கட்டி அடித்தாலும், ஸ்ரீஜா நடிப்பது சரவணன் மீனாட்சி தொடரில் மட்டும்தான். அதுவும் செந்தில் அட்வைஸ்படிதானாம்.

மதுரையிலேயே லவ்
முதல் சீரியலான மதுரையிலே இருவருக்கும் இடையே லவ் பத்திக்கிச்சாம். இப்போது வளர்ந்து, கிளைவிட்டு பூப்பூத்து மணம் வீசத் தொடங்கியுள்ளது. சீரியல் முடிந்த பிறகு திருமண அறிவிப்பு வரலாம் என்கிறார் இயக்குநர் அழகர்.

ஸ்ரீஜா என்ன சொல்றாங்க
சரவணன் மீனாட்சி தவிர வேற சீரியலை மறுக்க காரணம் நேரமின்மைதான் என்கிறார் ஸ்ரீஜா, எம்.ஏ. படிக்கிறேன் வேறு எந்த விசேச காரணம் இல்லை என்பது ஸ்ரீஜாவின் கருத்து.

அப்போ கல்யாணம்
இப்போதைக்கு ஒரு சீரியல் போதும் என்று நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் பற்றி வீட்டில்தான் முடிவு செய்யணும் என்கிறார் ஸ்ரீஜா.

யார் சொல்வது உண்மை?
ஊடகங்களில் செந்தில் - ஸ்ரீஜா லவ் பற்றி செய்திகள் இறக்கை கட்டி பறக்க, இவர்களோ அதை ஒத்துக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. கத்திரிக்காய் முற்றினார் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.


Click it and Unblock the Notifications











