»   »  ஹலோ.. சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?

ஹலோ.. சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழிப்புணர்வு கேள்வியா வந்தது தான் புள்ளி ராஜாக்கு எயிட்ஸ் வருமா? அதையும், ஓவர் டேக் பண்ணி 2016-ம் ஆண்டின் சிறந்த கேள்வியாக தேர்வு செய்யப்பட்டது கட்டப்பா ஏன் பாகுபலிய கொலை பண்ணாரு?

இப்போ கொஞ்ச நாளா இல்ல ரொம்ப நாளாவே தமிழ் ரசிகர்களுக்கு இருக்குற ஒரு முக்கியமான கேள்வி விஜய் டிவி-ல ஒளிப்பரப்பாகுற சரவணன் மீனாட்சி தொடரில், சரவணன் வருவாரா? மாட்டாரா? இருக்காரா? இல்லையா? அவருக்கு என்னதான்யா ஆச்சு? இதுதாங்க, தற்போது சீரியல் பார்க்கும் தாய்மார்கள், சீரியலுக்கு அடிமையாகும் இளைஞர்கள் மற்றும் குழந்தைங்க கூட கேக்குற ஒரே கேள்வி..

Saravanan Meenakshi Serial

கடந்த இரண்டு நாட்கள் சரவணன் மீனாட்சியை பார்த்த மக்களுக்கு அவ்வளவு சந்தோசம். இப்போ அடிக்கிற வெயில் கூட மழையும் சேந்து வரமாதிரி.. ஏன்னா சரவணன் வர போறாரு. பல மக்களின் கேள்விக்கு பதில் தருவதாக சரவணன் வரபோவதாகவும், அதனை சரவணனே கூறும் படியாகவும் நிகழ்சிகள் ஒளிப்பரப்படுகின்றது.

Saravanan Meenakshi Serial

தற்போது மக்களுக்கு ஒரு பக்கம் சரவணன் வருவதை எண்ணி ஒரு கேள்விக்கான பதில், வந்தாலும், மறுப்பக்கம் இதிலிருந்தே பல கேள்விகள் உதிக்கின்றது. அது என்னனு ஒரு டாப் 10 லிஸ்ட் போடலாமா?

கேள்வி நம்பர் 1. மீனாட்சிக்கு தான் பழசு மறந்துபோச்சே, சரவணன் வந்தா கடைசில மீனாட்சிக்கு சரவணன்ன அடையாளம் தெரியாம போச்சுனா..?

2. சரவணன் வந்தா சரவணபெருமாள் என்கிற வேட்டயனின் ரியாக்சன் எப்படி இருக்கும் ? ( அதா ஏற்கனவே மீனாட்சிக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்காரே..சரவணனோட சேர்த்து வைக்க)

3. சரவணன் லெட்டெர் போட்டே மீனாட்சியோட ரியாக்சன், யார் அது சரவணன் மீனாட்சி-ன்னு கேக்குற அளவுக்கு வந்திருச்சு, இதுல சரவணன் வந்தா..?

4. ஏற்கனவே மீனாட்சி பழசு என்னவா இருந்தாலும் வேட்டையன் மாமாவ விட்டு போக மாட்டேனு சொல்லுது. அப்போ விட்டு போகலைனா, சரவணன் மீனாட்சி சீரியல் பேரு, வேட்டையன் மீனாட்சி-ன்னு மாற்றிடுவாங்களோ..? (மைண்ட் வாய்ஸ்: அதா வேட்டயனுக்கு சரவணபெருமாள்-ன்னு இன்னொரு பேரு இருக்குல, அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிருவாங்க..​)

5. கலையரசி யாருக்குப்பா ஜோடி..? வேட்டையனா? இல்ல பாண்டியா? அதுவும் இல்லைனா, ஒருவேள வேட்டையன், மீனாட்சி மேல இருக்குற கோவத்துல சரவணனும், கலையரசியும் கல்யாணம் பண்ணிப்பாங்களோ..? சற்று யோசிக்கவேண்டிய விஷயம்.

6. சரிப்பா, எல்லாம் இருக்கட்டும், நாங்க முதல்ல இருந்து சரவணன் மீனாட்சி பாக்குறோம், முன்னாடி இருக்குற கதைக்கும் இப்போ நடக்குற கதைக்கும் சம்பந்தமே இல்லையே... இந்த சீரியலோட கதைதான் என்ன ?

7. சக்தி சரவணன் வராரு சரி, அவரோட அம்மா அப்பா சீரியல தொடங்கி வைத்த சரவணனும் மீனாட்சியும் வருவாங்களா?

8. ஒரு கதைய ஆரம்பிச்சு போற போக்குல கதைய நகர்த்தி, கதை என்னனு பாக்குறவங்களுக்கும் புரியாம, நடிக்கிறவங்களுக்கும் புரியாம, அப்படியெல்லாம் இந்த கதைய இதுக்கும் மேல தொடரனுமா..?

9. ஒரு வேளை, கதையில ஆள மத்துற மாதிரி கதைய மாத்திட்டரோ....? சரவணன் மீனாட்சி டைரக்டர் சார், ஆடியன்ஸ் பாவம்.

10. கடைசியா ஒரே ஒரு சந்தேகம் மை லார்ட், சரவணன் மீனாட்சி சீரியல் எப்போ சார் முடியும். இதுனால பலபேரோட நேரம் வீணாகுது, உங்க டிவியோட மதிப்பும் குறையுது.

English summary
Here Some Questions on Saravanan Meenakshi TV Serial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil