»   »  சரவணன் மீனாட்சி சந்திச்சிட்டாங்க... இனி ஏலேலோதான்...

சரவணன் மீனாட்சி சந்திச்சிட்டாங்க... இனி ஏலேலோதான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சியில் சரவணனும், மீனாட்சியும் சந்திச்சிட்டாங்க. இனி அடிக்கடி ஏலேலோ...ஏலேலோ என்று கேட்க ஆரம்பித்து விடும் என்று பேசிக்கொள்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

சரவணன் மீனாட்சி' தொடர் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் சரவணன் ஆக மிர்ச்சி செந்தில், மீனாட்சியாக ஸ்ரீஜா செந்தில் ஆகியோர் நடித்தனர். முக்கிய கதாபாத்திரங்களில் ராஜசேகரன், குயிலி ஆகியோர் நடித்தனர்.

ஒரு கட்டத்தில் முதல் பாகத்தை திடீரென நிறைவு செய்து அடுத்து வேறு நட்சத்திரங்களுடன் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்தனர். அதில் சரவணன் ஆக இர்ஃபான், மீனாட்சியாக ரக்ஷிதா நடித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் இர்ஃபான் இத் தொடரிலிருந்து விலகினார்.

Saravanan meets Meenakashi in Vijay TV

சரவணனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மீனாட்சியின் மற்றொரு முறை மாமனான வேட்டையன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை மாற்றினார்கள். அன்றிலிருந்து இத் தொடர் 'வேட்டையன் மீனாட்சி'யாக மாறியது. ரு வழியாக வேட்டையனும், மீனாட்சியும் பல தடைகளை மீறி ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

ரியோ - ரக்ஷிதா

சரவணன் மீனாட்சி சீசன் 3 ஆரம்பித்து விட்டது. இதில் சரவணனாக ரியோவும், மீனாட்சியாக அதே ரக்ஷிதாவும் நடிக்கின்றனர். மதுரையில் உள்ள மீனாட்சியை நெல்லை மாவட்டம் சுரண்டையில் இருக்கும் சரவணன் எப்படி சந்திக்கப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மாமன் மகனுடன் நிச்சயம்

லண்டனில் படித்து விட்டு வந்திருக்கும் மதுரை மருதுபாண்டியின் மகள் மீனாட்சிக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மாமன் மகனுடன் திருமணம் பேசி முடிக்க அது பிடிக்காமல் தனக்கான மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறாள் மீனாட்சி.

மதுரை மடோனா

சரவணன் மீனாட்சி 2வில் மைனாவாக வந்து கலக்கிய தோழி, இதில் லோக்கல் சேனல் தொகுப்பாளினியாக மதுரை மடோனாவாக வந்து வாய் ஓயாமல் பேசுகிறார். மடோவிற்கு தெருவிற்கு தெரு ரசிகர் மன்றம் இருக்கிறது.

மாமன் மகள் முத்தழகு

சரவணன் மாமன் மகள் முத்தழகுக்கு சரவணன் மீது காதல். இந்த காதல் சரவணனின் தங்கைக்கு தெரிந்து விடுகிறது. தனது அண்ணன் வீட்டில் முத்தழகுவை சம்பந்தம் பேசுகிறார் முத்தழகுவின் அம்மா. அண்ணனிடம் பேச மூத்த மகனிடம் கேட்க, அவனோ நான் எடுத்து வளர்த்த குழந்தை முத்தழகு என்று மறுத்து விடுகிறான்.

கோவில் திருவிழா

சுரண்டை கோவில் திருவிழாவிற்கு விழா கமிட்டி சார்பாக பத்திரிக்கை வைக்க போகும் சரவணன், தனது மனதிற்கு பிடித்த தேவதையை சந்திக்கப் போவது தெரியாமலேயே மதுரைக்குப் போகிறான். அங்கேதான் மனம் கவர்ந்த தேவதையை சந்திக்கிறான்.

மீனாட்சியுடன் சந்திப்பு

மீனாட்சியை பார்த்த உடனேயே அவளது பேரை கேட்ட உடனேயே ஏலே... ஏலேலோ என்ற ஹம்மிங் கேட்கிறது சரவணனுக்கு. நமக்குள்ள ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது என்றும். இந்த சத்தம் சில நாட்களில் உங்களுக்கும் கேட்கும் என்றும் மீனாட்சியிடம் கூறுகிறான் சரவணன்.

தாத்தாவும் பேரனும்

இதிலும் தாத்தாவாக வரும் ராபர்ட் ராஜசேகர், எல்லோரிடமும் திட்டு வாங்குகிறார். பேரன் சரவணனுடன் சேர்ந்து தண்ணியடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். இனி இவர்தான் பேரன் காதலுக்கு உதவி செய்வார். இன்னும் எத்தனை பேரிடம் திட்டு வாங்குவாரோ.

களை கட்டும் திருவிழா

கோவில் திருவிழா இனி சரவணன் மீனாட்சியில் களைகட்டப் போகிறது. சரவணனுக்கு கேட்ட ஏலேலோ சத்தம் மீனாட்சிக்கு கேட்குமா? மாமன் மகள் முத்தழகுவின் காதல் சரவணனுக்கு தெரிய வருமா? இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

English summary
Vijay TV Saravanan Meenakshi season 3 serial telecast on July 18. Hero Saravanan met heroine Meenakshi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil