பற்றி எரியும் பிக்பாஸ் வீடு: லூசு.. அப்படிதான் பேசுவேன்.. மொத்த திமிரையும் காட்டிய சரவணன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo 2 : Day:40 : Chithappu saravanan Vs Cheran : மரியாதை குறைவாய் பேசிய சரவணன்

சென்னை: சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சேரனுக்கு பின்னால் பேசி, திட்டி வந்த சரவணன் இன்று சேரனை நேருக்கு நேராக தரக்குறைவாக பேசிவிட்டார். இன்று வெளியான முதல் புரமோவே பீதியை கிளப்பும் வகையில் இருந்தது.

சேரனை போயா வாயா என்றும் போடா வாடா என்றும் கேவலமாக பேசினார் சரவணன். இதுகுறித்து பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதபோதே மற்றொரு புரமோவும் வெளியாகியுள்ளது.

லூசு மாதிரி பேசுறாரு

லூசு மாதிரி பேசுறாரு

அதாவது, சாண்டியிடம் சேரனை கை காண்பித்து அவர் லூசு மாதிரி பேசி வருகின்றார் என்று கூறுகிறார் சரவணன். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் தர்ஷன், லூஸ் என்ற வார்த்தையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் அவர் அவருடைய ஒபினியனைதான் சொல்கிறார் என்றும் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் தர்ஷன்.

உங்களை சொல்லவில்லை

உங்களை சொல்லவில்லை

அப்போது நீங்கள் லுசு என்று என்னை கூறினீர்கள் ஏன் அப்படி பேசுகிறீர்கள், லூசு, போயா வாயா, போடா வாடா என்று பேச வேண்டிய அவசியம் இல்லை என மிக பொறுமையாக கூறுகிறார் சேரன். உடனே உங்களை சொல்லவில்லை என மாற்றி பேசுகிறார் சரவணன்.

திமிராக பேசிய சரவணன்

திமிராக பேசிய சரவணன்

நீங்கள் என்னைதான் சொன்னீர்கள் என்று சேரன் கூற, உன்னை சொல்லவில்லை என்று குரலை உயர்த்திய சரவணன், நீ நீ என்றும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசினார். ஏன் நீ என்று மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என்று சேரன் கேட்க அப்படிதான் பேசுவேன் என்று திமிராக சொல்கிறார் சரவணன்.

பேசாதீங்க அண்ணே

பேசாதீங்க அண்ணே

இதனால் நொந்துபோன சேரன், அப்படி பேசாதீங்க அண்ணே என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார். இந்த புரமோக்களின் சேரனை பார்க்கவே பாவமாக உள்ளது. பத்து படங்களுக்கும் மேல் இயக்கிய தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். நான்கு தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

ஏறும் கிரைம் ரேட்டுகள்

ஏறும் கிரைம் ரேட்டுகள்

அப்படிப்பட்ட ஒரு மனிதரை மிகக் தரக்குறைவாக பேசி வருகிறார் சரவணன். அந்த சூழ்நிலையையும் மிகவும் நிதானமாக கையாண்டார் சேரன். இதனால் சரவணன் மீதான கிரைம் ரேட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கமல் நாளைக்கு சொல்லுவாரு

முதலில் ரெட்கார்டை கொடுத்து சரவணனை வெளியே அனுப்புங்கள் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. யாரு லூசு? யாரு முட்டா பயன்னு நாளைக்கு கமல் வந்து சொல்லுவாங்க. அடுத்த வாரம் மக்களாகிய நாங்கள் சொல்லுவோம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X