வெளியே வந்தா சேரனை தூக்கி போட்டு மிதிப்பேன்.. சரவணன் குறித்து நேற்று முதல் தீயா பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியா வந்தால் சேரனை தூக்கிப்போட்டு மிதிப்பேன் என கூறியுள்ளார் சரவணன்.
பிக்பாஸ் வீட்டில் இதுவரை பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். வனிதாவும் மீராவும் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த சண்டை என்ற பேச்சே இல்லாமல் இருந்தது.
இதனால் நொந்துபோன பிக்பாஸ் மொட்டக் கடுதாசி டாஸ்க்கை கொடுத்து சக்களத்தி சண்டையை கிரியேட் செய்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அரைத்தமாவே அரைக்கப்பட்டது.

அடிக்க பாய்ந்த
இந்நிலையில் இன்றைய புரமோவில் சேரனிடம் சரவணன் சண்டை போடுவது தெரியவந்தது. இன்று வெளியான முதல் இரண்டு புரமோக்களில் சேரனை சரவணன் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசியும் அடிக்க பாய்ந்தும் வந்தார்.

நரேஷ் என்பவர் பதிவு
இதனால் சேரன் ரசிகர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கும் சரவணனுக்கும் மிகப்பெரிய சண்டை நடந்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர் குழுவில் உள்ளதாக கூறி நரேஷ் என்பவர் கருத்து ஒன்றை நேற்றே பதிவிட்டுள்ளார்.

போயா என்றும் போடா என்றும்
அதில் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கின் போது பெஸ்ட் அன்ட் வொர்ஸ்ட் பர்ஃபாமர் யார் என்பதில் சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. அப்போது ஓபனாகவே சரவணன், சேரனை போயா என்றும் போடா என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கிப்போட்டு மிதிப்பேன்
மேலும் சேரன் வெளியே வந்தா தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்றும் சரவணன் கூறியிருக்கிறார். நான் ஹீரோவா நடிக்கும்போதெ அஸிஸ்ட்டன்ட்டா இருந்தவன் என்று கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியிருக்கிறார் சரவணன்.
பார்க்கவே முடியவில்லை
அப்போது சேரனுக்கு ஆதரவாக தர்ஷனும் மதுமிதாவும்தான் குரல் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேரனும் அவரது டீமும் லிமிட்டை தாண்டி நடந்துகொண்டதாகவும் நரேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அப்போதும் சேரன் அமைதியாகவே இருந்ததாகவும், அந்த மூன்று பேரும் சேரனை அவமானப்படுத்தியதை பார்க்க ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாகவும் நரேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

உண்மைதான் போல
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நாள் தாமதமாக ஒளிபரப்பப்படும் நிலையில் நேற்றே நரேஷ் இதனை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஆக இவர் சொல்வது எல்லாம் உண்மைதான் போல. இதனிடையே இருவரையும் அழைத்து பிக்பாஸ் சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

நியாய தர்மமும் அம்பலமாகிவிடும்
சரவணன், கவின், சாண்டி ஆகியோரை காப்பாற்ற பிக்பாஸ் அவற்றையெல்லாம் மறைக்கிறாரா அல்லது எபிசோடில் வச்சு செய்வோம் என காத்திருக்கிறாரா என்பது இன்றிரவு தெரியும். அப்போதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் நியாய தர்மமும் அம்பலமாகிவிடும்.


Click it and Unblock the Notifications











