மாமன்தான் படிக்க அனுப்பிட்டானே...நீங்க எதுக்குடா செல்ஃபி எல்லாம்....?
சென்னை: சன் டிவியின் தமிழ் செல்வி சீரியலில் , தமிழ் செல்விக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கும் குடும்பம்...ஆனால், மாவட்டத்தில் முதல் மார்க் எடுத்த தமிழ்செல்வியோ கலெக்டருக்கு படிக்க ஆசைப்படும் நிலமை என்று கதை நகருது.
ஒரு வழியாக நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டு, தமிழ்செல்வி கல்லூரியில் படிக்க முடிவாகி அட்மிஷனும் போட்டாச்சு.
இப்போது மாமா சரவணன், என்னை கல்யாணம் செய்துக்கிட்டு படிக்கப்போ என்று போனில் கையில் தாலியுடன் கோயிலுக்கு அழைக்கிறான். வராவிட்டால் செத்து விடுவேன் என்றும் மிரட்டுகிறான். என்ன செய்வாள் தமிழ்செல்வி

பஸ்ஸில் இடைமறித்து
பேருந்தை இடை மறித்து தமிழ்செல்வியை இறங்கி வர சொல்லுங்க...அப்போதுதான் நான் பஸ் போக வழிவிடுவேன்னு சொல்லி நடு ரோட்டில் நிற்கிறான் சரவணன். பெரியப்பா நான் போயி என்னன்னு பார்க்கறேன்னு சொல்ல, இல்ல பெரிப்பா நீங்க கோவத்துல எதாவது பேசிடுவீங்க...நானே பேசி சமாளிச்சு மாமாவை நல்லபடியா அனுப்பி வைக்கறேன்னு சொல்றா.

அந்த தாலியை பூசாரி
தமிழ்செல்வி பஸ்ஸை விட்டு இறங்கி வந்து, மாமா எவ்வளவு நேரம் நீங்க என்னை வழி அனுப்ப வருவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேன் தெரியுமா... ஏன் மாமா வரலன்னு கேட்கறா. நான் கோயிலுக்கு கூப்பிட்டேன் மறந்துட்டியா...நீ பாட்டுக்கு காலேஜுக்கு கிளம்பிட்டேன்னு சரவணன் கேட்கறான். பூசாரி அந்த தாலியை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்றான்.

படிப்பு முக்கியம்
படிப்பு முக்கியம் மாமா...பாட்டிதான் உங்ககிட்ட பேசினாங்களே மாமான்னு தமிழ்செல்வி இழுக்க..... சரி சரி விடு தமிழ்செல்வி. நம்ம குடும்பத்துல யாரும் ரொம்ப படிக்கலை. நீ படிச்சு வந்தா எங்களுக்கு பெருமைதானே...அதுவும் கலெக்டரோட புருஷன்னு சொன்னா எனக்கு எவ்வளவு சந்தோசம்...

பிடி தாலியை
நீ படிச்சு முடிச்சு வர்ற வரைக்கும் இந்த தாலியை உன் பேக்ல வச்சுக்கோ.இதை பார்க்கறப்போ எல்லாம் உனக்காக உன் மாமன் காத்திருக்கேன்னு நினைப்பு வரணும்னு சொல்லி தாலியை குடுக்கறான். சரி மாமா.. நான் வச்சுக்கறேன்... என்னை ஆசிர்வாதம் செய்து வழி அனுப்பு மாமான்னு சொல்றா தமிழ்செல்வி

இந்த புள்ளையை
இப்படி குடும்பத்தில் ஆசிர்வாதம் வாங்கிகிட்டு, வர்ற அந்த புள்ளையை போட்டிக்கு செல்ஃபி எடுக்க அலையறானுங்க இந்தப் பட்டணத்து பசங்க. இந்த பொண்ணுகூட தில்லு இருந்தா செல்ஃபி எடுத்துட்டு வாடான்னு சொல்றான் ஒருத்தன். இன்னொருத்தன் என்னாலை முடியும்டான்னு போயி,நீங்க இறந்து போன என் லவ்வர் மாதிரி இருக்கீங்கன்னு ஏமாத்தி போட்டோ எடுத்துக்கறான்...
மாமன்காரன் மனசை சமாதானப் படுத்துகிட்டு படிக்க அனுப்பிட்டான். நீங்க எல்லாம் ஏண்டா இப்படி அலையறீங்க?


Click it and Unblock the Notifications











