saregamapa:பாடலாசிரியர் சினேகன் சொன்ன வார்த்தை.. பாட முடியாமல் அழுத “அசானி”க்கு குவியும் ஆறுதல்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் நெருட வைத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கலந்து கொண்ட பாடகி அசானி பாடி கொண்டிருக்கும்போது பாதி பாடலில் பாட முடியாமல் கண் கலங்கி அழுதிருக்கிறார்.

அதற்கு ஆறுதல் சொல்லும் விதமாக பாடலாசிரியர் சினேகன் அனைவரிடமும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இது குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமபா ஜூனியர் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து சரிகமபா லிட்டில் சாம்பியன் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற பெண் பெரும் கஷ்டங்களுக்கு இடையே பல போராட்டங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சிறுமியிடம் போதிய பணம் இல்லாததால் இரண்டு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தன்னுடைய சூழ்நிலையை தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இவருக்கு சில வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு தாங்கள் டெடிகேஷன் செய்யும் பாடல்களை பாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அசானி தன்னுடைய தாய்க்காக ஒரு பாடலை பாடுகிறார்.

இந்த ப்ரோமோவின் ஆரம்பத்தில் அவர்," எனக்காக எங்க அம்மா தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்காகவும் எங்களுடைய மக்களுக்காகவும் நான் பாடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருடைய அம்மா அந்த ப்ரோமோவில் பேசுகையில், "எங்க பெண்ணாவது எங்க தாய் மண்ணை மிதித்ததே என்று எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அசானி ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பாடலின் பாதியில் அவரால் பாட முடியாமல் தடுமாறி விடுகிறார். அதனால் கண் கலங்கி தவித்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த சினேகன் உடனே "தங்கை எங்கேயோ ஒரு இடத்தில் தடுமாறி இருக்கிறாள். அவள் பாதங்களை சரி செய்ய உங்களது உள்ளங்கையை ஏந்தி அடுத்த களத்திற்கு கொண்டு போங்கள்" என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே ஈழத்திலிருந்து இன்னொரு பெண் இந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடி கொண்டிருக்கும்போது தன்னுடைய மாமா போரில் கலந்து கொள்ளும் போது இறந்துவிட்டார் என்று கூறி அவருக்காக பாடலை டெடிகேஷன் செய்திருந்தார். அதற்காக சினேகன் நான் உனக்கு தாய் மாமாவாக இருக்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மனசு தான் கடவுள்..சரிகமப நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி..இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர்காரர்கள்


Click it and Unblock the Notifications











