திறமை இருந்தும் நிராகரிப்பு.. கண்ணீருடன் பகிர்ந்த சரிகமப பிதா பெற்றோர்.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: திறமை இருந்தும் என் மகள் நிராகரிக்கப்பட்டாள் என்று சரிகமப பிதாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
ஜீ தமிழில் சரிகமப: தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சரிகமப தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.
ஆடி மாத ஸ்பெஷல்: இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் ஆடி மாத ஸ்பெஷலாக பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. இந்த ரவுண்டில் போட்டியாளர்களில் ஒருவரான பிதா ஸ்ரீரங்க நாதனுக்கு வந்தனம் என்ற பாடலை பாடி கோல்டன் பெர்பாமன்ஸ் வாங்கியுள்ளார்.
பல மேடைகளில் நிராகரிப்பு: முஸ்லீம் பெண்ணான பிதா பர்பாமென்சில் பட்டய கிளப்பி பாராட்டுகளை பெற மேடை ஏறிய பெற்றோர் பிதாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான விஷயங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். அதாவது பிதாவின் அக்கா ஸ்டேஜ் சிங்கர் தான்,அவள் பாட செல்லும் மேடை நிகழ்ச்சிகளுக்கு பிதாவும் சென்று விடுவாள், அவள் நன்றாக பாடுவாள் என தெரிந்தும் அவளுக்கு பாட வாய்ப்பு கொடுக்காமல் பல மேடைகளில் நிராகரித்துள்ளனர்.
கண்கலங்கிய பெற்றோர்: ஆனால் இன்று இந்த மேடையில் இதனை பேர் முன்னால் பாடி பாராட்டுகளை பெறுவது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எமோஷனலாக பேசி கண் கலங்கியுள்ளனர். ஒரு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த பெண் இந்து மத பக்தி பாடலை பாடி அசத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்ரீனிவாஸ், சைந்தவி, அபிராமி ஆகியோருடன் இணைந்து மனோ சிறப்பு நடுவராக பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











