சரிகமப கிராண்ட் ஃபினாலே.. இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் போட்டியாளர்கள்.. யார் யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

மொத்தம் 28 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
சரிகமப கிராண்ட் ஃபினாலே: டிசம்பர் 17-ம் தேதி கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெறும் என சொல்லப்பட்டு வருகிறது. இதில் ரிக்ஷிதா மற்றும் கில்மிஷா ஆகியோர் இறுதி போட்டுக்கு தேர்வாகியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் மூன்றாவது பைனலிஸ்ட் போட்டியாளரை அறிவிக்கப்பட உள்ளனர்.
காதல் இசை ரவுண்ட்: இதற்கான ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி இருந்தது, அதில் காதலும் இசையும் ரவுண்ட் நடைபெற உள்ளது. இதில், நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதும் தெரிய வந்திருந்தது. இதன் மூலமாக ஒருவரை மட்டுமே அடுத்த பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் போட்டியாளர்களின் திறமையை கண்டு இருவரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ரொக்கப்பரிசு: அந்த இருவர் ருத்ரேஷ் மற்றும் சஞ்சனா தான் என சொல்லப்படுகிறது, இதுகுறித்த அறிவிப்பு சனி மற்றும் ஞாயிறுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளனர், வெற்றியாளருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











