சரிகமப கிராண்ட் ஃபினாலே.. டைட்டிலை வென்ற இலங்கை குயில் கில்மிஷா.. ஏமாந்த ஆசானி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 டைட்டிலை இலங்கை குயில் கில்மிஷா வென்றுள்ளார்.
ஜீ தமிழில் சனி மற்றும் ஞாயிறு தினத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் மாதம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
சரிகமப கிராண்ட் ஃபினாலே: சரிகமப கிராண்ட் ஃபினாலே நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டாக நடைபெற்றது. இதில், ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதி போட்டுக்கு தேர்வானார்கள். இதில், தன் வசீகர குரலால் அனைவரையும் ஈர்த்து வந்த இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்று டைட்டிலை வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த ஆசானி: இதே நிகழ்ச்சியில் இலங்கையச் சேர்ந்த ஆசானி என்பவரும் கலந்து கொண்டார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அசானியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே தேயிலைத் தோட்டத்திலும், அம்மா, ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். அசானியின் மற்றொரு அண்ணன் மட்டும் டீ கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
சரிகமப நிகழ்ச்சியில்: சினிமா, டிவி என்று எதுவும் பார்க்காமல் எப்எம் ரேடியோவில் வரும் பாட்டை கேட்டு அசானி பாடப் பழகியவர். அவரின் திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை நம்பி வந்ததால் இவருக்கு ஒரு வாய்ப்பை நடுவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் ஏமாற்றம்: அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆசானி தனது திறமையை நிரூபித்து வந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஆசானி தவற விட்டிருந்தார். இருப்பினும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய அளவில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார். ஆசானி இறுதிப்போட்டிக்கு செல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.


Click it and Unblock the Notifications











