Saregamapa little champs 3: தூய்மை பணியாளர்களை இளைப்பாற வைக்கும் ஜீ தமிழ்.. சரிகமப பைனல் ஸ்பெஷல்!

சென்னை: ஜீ தமிழின் முன்னணி நிகழ்ச்சியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3.

இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பான விஷயங்களை ஜீ தமிழ் தற்போது இணைத்துள்ளது.

Saregamapa little Champs season 3 show invites Corporation staffs for Finals

சரிகமபா லிட்டில் சாம்ப்ஸ் 3 ஷோ: சின்னத்திரையில் மாஸ் காட்டிவரும் ஜீ தமிழ் சேனலில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ள நிகர்ச்சி சரிகமப லிட்டில் சாம்ப்ஸ். இதன் 3வது சீசன் தற்போது நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் பைனல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுளளது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

சரிகமபா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி: இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல சுவாரஸ்யங்கள் ரசிகர்களை கவர்ந்து வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியிலும் இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களை சேனல் இணைத்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சென்னையை மீட்டுக் கொண்டு வர அயராது உழைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் தூய்மை பணியாளர்கள். அவர்களைத்தான் தற்போது சரிகமப நிகழ்ச்சி கௌரவப்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களுக்கு கௌரவம்: இந்த பேரிடர் காலத்தில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இரவு பகல் பாராமல் உழைத்தவர்கள் தூய்மைப்பணியாளர்கள். அவர்களின் உழைப்பால்தான் நமது தலைநகரம் இவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் நமது தலைநகரை விரைவில் மீளச் செய்த தூய்மை பணியாளர்களை இசையால் இளைப்பாற செய்யும் வகையில் சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் அவர்களை மகிழ்விக்க முடிவெடுத்துள்ளது.

அழைப்பு விடுத்த அர்ச்சனா: இதற்காக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுக்கு சரிகமப கிராண்ட் பைனலுக்கான டிக்கெட்டுகளை கொடுத்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அர்ச்சனாவின் அழைப்பை கேட்டதும் தூய்மை பணியாளர்கள் தங்களை யாரும் இதுவரை இப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து அழைத்ததே இல்லை என நெகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.

ஏராளமான சர்ப்பிரைஸ்கள்: சரிகமப லிட்டில் சாம்ஸ் டைட்டில் வின்னரை கொண்டாடுவது மட்டுமல்லாமல் நமக்காக உழைத்த தூய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ம் தேதி மாலை 4 மணி முதல் நேரடியாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பல நெகிழ்ச்சியான சம்பவங்களை இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ரசிகர்கள் கண்டுகளித்த நிலையில் இந்த இறுதிப்போட்டியிலும் ஏராளமான சர்ப்பிரைஸ்கள் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X