தேவயானி மகள் இருக்க வேண்டிய மேடை.. சரிகமப சீனியர் 5 டைட்டில் வின்னர்.. ஜீ தமிழ் அள்ளி கொடுத்த பரிசு!
சென்னை: மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உள்ளது. இதில், சீரியல்கள், நடன போட்டி, பாட்டுப்போட்டி என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 மே மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேற்று கிராண்ட் பிளாலே கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார்? யார் யாருக்கு எவ்வளவு பரிசு என்பதை பார்க்கலாம்.
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5ல் நடுவர்களாக சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக், ஸ்வேதா மோகன், எஸ்பி சரண். சைந்தவி ஆகியோர் இருந்தனர்த. இந்த நிகழ்ச்சியில், நடிகை தேவயாணியின் மகள் இனியா கலந்து கொண்டார். அவர் முதல் சுற்றிலேயே பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார். 7 மாதமாக பல கட்டமாக நடந்த போட்டியில் தனது இனிமையாக குரலால், பல பாடல்களை சிறப்பாக பாடி தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சரிகமப சீனியர்ஸ் 5: இதையடுத்து, இறுதிப்போட்டியாளர்களை தேர்வு செய்யும் 'One & One' சுற்று நடைபெற்றது. அந்த சுற்றில் தேவயானியின் மகளை விட, பவித்ரா சிறப்பாக பாடி இறுதிப்போட்டிக்கு சென்றார். இனியா இறுதிப்போட்டிக்குள் நுழைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கை நழுவிப்போது. இறுதிப் போட்டியாளர்களாக சுஷாந்திகா, சபேசன், செந்தமிழன், பவித்ரா, ஸ்ரீஹரி மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வான நிலையில், நேற்று சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே கோலாகலமாக தொடங்கியது.
டைட்டில் வின்னர்: இறுதிப் போட்டியில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில், சுசாந்திகா சிறப்பாக பாடி டைட்டிலை வென்றார். அவருக்கு, வெற்றிக் கோப்பையும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்பரான சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசும், 2ம் ரன்னர் அப்பரான சின்னு செந்தமிழனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கமும், பவித்ராவிற்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும், தேவயானியின் மகள் நின்று இருக்க வேண்டிய மேடை என்று இணையத்தில் கருத்துக்களை கூறி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











