கயாடு லோஹருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சிறுவன்?.. டிவி ஷோவில் இப்படியா? எஸ்.பி.பி. சரண் ஷாக்!

சென்னை: இந்த வாரம் சரிகமப லிட்டில் சாம்பியன் பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பாட்டு பாடும் சிறுவன் ஒருவன் டிராகன் பட ஹீரோயினுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுக்க முயன்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹாட்ஸ்பாட் படத்தில் சிறுவர்களை எப்படியெல்லாம் டிவி நிகழ்ச்சிகள் சீரழிக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் தொடர்ந்து சில டிவி சேனல்கள் டிஆர்பிக்காக இப்படி செய்து வருவதாக குற்றச்சாட்டுகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பி வருகின்றனர்.

மலையாளத்தில் மேலாடையே அணியாமல் நடித்த நடிகையை நம்ம ஊருக்கு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய பிரதீப் ரங்கநாதன் இப்போதே புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவருடன் சுற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான "வழித்துணையே" பாடலின் இறுதியில் பிரதீப் ரங்கநாதன் கயாடு லோஹருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த காட்சியை பதிவிட்டே நெட்டிசன்கள் வாழுறான் டா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

saregamapa kayadu lohar dragon

இந்நிலையில், "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணு தான்" பாடலை பாடிய சிறுவன் டிராகன் படத்தின் ஹீரோயினுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி அந்த சேனலையும் குழந்தையின் பெற்றோரையும் திட்டி வருகின்றனர்.

சரிகமப: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்கிற நிகழ்ச்சி எப்படி குழந்தை பாடகர்களை உருவாக்குகிறதோ அதே போல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோவும் குழந்தை பாடகர்களை உருவாக்கி வருகிறது. வார வாரம் குழந்தைகள் க்யூட்டாக பாட்டு பாடும் போது வரும் பிரபலங்கள் அவர்களுக்கு முத்த மழை பொழிவதும் குழந்தைகளிடம் செல்லமாக முத்தங்களை வாங்கிக் கொள்வதும் க்யூட்டாக பார்க்கப்பட்டாலும், அது குழந்தைகளின் உளவியலை பாதிக்கும் என்கிற எச்சரிக்கை மணிகளும் அடிக்கப்பட்டு வந்துக் கொண்டு தான் இருந்தன.

கயாடு லோஹருக்கு உதட்டில் முத்தம்: மலையாள திரைப்படமான பத்தொன்பதாம் நூட்டாண்டு படத்தில் மேலாடை அணியாமல் படு கவர்ச்சியாக நடித்து இருந்த கயாடு லோஹர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த நடிகைக்கு படத்தில் பிரதீப் ரங்கநாதன் பல இடங்களில் முத்த மழை பொழிந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அப்படியே உதட்டில் முத்தம் கொடுக்க வந்தவுடனே நடிகை கொஞ்சம் உஷாராகி அவன் உதட்டில் முத்தம் கொடுப்பதற்குள் நகர்த்தி கன்னத்தில் முத்தம் கொடுக்கச் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

எஸ்.பி. சரண் ஷாக்: இந்த கொடுமையை எல்லாம் பார்த்து பாடகரும் அந்த போட்டியின் நடுவருமான எஸ்.பி.பி. சரண் ஷாக்காகி கொடுத்த ரியாக்‌ஷனையும் சேர்த்து போட்டு நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அந்த வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து வருகின்றனர். குழந்தைகளுக்கு நடிகைகள் முத்தம் கொடுப்பதும், அவர்களை ஹீரோ ரேஞ்சுக்கு நினைக்க வைப்பதும், இளம் நடிகைகள் வந்தால் இப்படியெல்லாம் செய்ய சொல்லி ஹைப்பை எகிற வைப்பதும் புரமோஷன் யுக்தியாக கையாளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்றும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதுபோன்றவற்றை எடிட் செய்து தான் வெளியிட வேண்டும் என்கிற கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X