twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யம் டிவியில் காமெடி கலாட்டா: சேதி கேளு ரெட்டை வாலு

    By Mayura Akilan
    |

    Sathiyam TV
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி கலந்த நிகழ்ச்சிகளுக்கு எப்போமுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் தொலைக்காட்சியின் புதிய வரவான சத்யம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சேதி கேளு வித் ரெட்ட வாலு' நையாண்டி நக்கள் கலந்த நிகழ்ச்சி நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

    தினசரி செய்திகள், செய்தியின் நடுவே இருக்கும் சூட்சுமங்களையும் செய்தியை உருவாக்கும் மனிதர்களின் சுவாரஸ்யங்களையும் உலகுக்கு கொண்டு வந்து, வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சி இது. அதில் ஒரு குட்டி வெடி, குறும்பு ஜோடியின் கடி... என நிகழ்ச்சி முழுக்க குலுங்கிச் சிரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர்களின் உடல்மொழியும் நன்றாக பொருந்தி வருவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை நினைவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பில் மறுநாள் காலை 11 மணிக்கும் காணலாம். கண்டு ரசித்து சிரியுங்களேன்.

    English summary
    Sathiyam Television Sethi Kelu with Rettai Vallu hilaurious political comedy show Program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X