விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!

சென்னை : வி.ஜே மணிமேகலை தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். இவருக்கு நண்பர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த மணிமேகலை, எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். அவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு சன் மியூசிக்கில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்து. இதையடுத்து சன் மியூசிக்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிராங்கா சொல்லட்டா , ஃபீரியா விடு, ஹாட் சீட், ஒ.மை.காட், பிளாக், வெட்டி பேச்சு மற்றும் கோலிவுட் டைரீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை அவர் கலக்கலாக தொகுத்து வழங்கினார்.

 second year wedding anniversary lovely couple

இவர் சன் மியூசிக்கில் இருக்கும் போது டான்ஸ் கொரியோகிராபரான ஹுசைனை காதல் மலர்ந்தது. இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு செய்து கொண்டனர்.

அதன் பின்னர். 2019ல் விஜய் டீவி நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹுசைன் இயல்பில் நடன இயக்குனர் என்பதால் மணிமேகலைக்கு பிரச்சினை ஏதும் இல்லாமல் நடன முறைகளை அவரது கணவரே கற்றுத்தந்து தன்னுடன் ஆட வைத்தார். அந்த நிகழ்ச்சி இவர்களுக்கு ஒரு நல்ல பெயரைத் தேடித் தந்தது.

தற்போது சன் மியூசிக்கில் தொகுப்பாளர்பணியை விட்டு விட்ட மணிமேகலை, விஜய் டீவியின் கே.பி.ஒய் சாம்பியன்ஸ் 2 நிகழச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது இரண்டாம் ஆண்டு திருமணநாளை வெகு விமர்சையாக இன்று கொண்டாடினார்.

விஜய் டீவி தனது தொகுப்பாளர்களை எப்போதும் கௌரவப்படுத்தி அவர்களை ஒரு பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் என்பதற்கு நிறையே உதாரணங்கள் இருக்கின்றன. அது போல மணிமேகலையும் வளர்ச்சி அடைய அவருடைய திருமண நாளில் நாமும் வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X