மணிமேகலை சூர்யவம்சம் சரத்குமார் போல மாறிட்டாரே.. அடேங்கப்பா ஆயுத பூஜைக்கு எத்தனை வாகனங்கள்!
சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை ஏகப்பட்ட பிரபலங்கள் கொண்டாடி இன்ஸ்டாகிராம் முழுக்க போட்டோக்களை அடுக்கி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரியங்காவுக்கு சப்போர்ட்டாக பல விஜய் டிவி பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், சில பிரபலங்களும் ரசிகர்களும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்தனர். சொந்த ஊரில் வீடு கட்டி வரும் மணிமேகலை ஆயுத பூஜையை முன்னிட்டு தன்னுடைய வாகனங்களுக்கு எல்லாம் பூஜை போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை சொல்லியுள்ள மணிமேகலையின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

ஆயுத பூஜை கொண்டாடிய மணிமேகலை: சன் மியூசிக் தொகுப்பாளினியாக இருந்த போதே ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மணிமேகலை. அதன் பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டு கலக்கினார். கோமாளியாக இனியும் தொடர மாட்டேன் என விலகிய மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக மீண்டும் உள்ளே வந்தார். அங்கே பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கிராண்ட் ஃபினாலேவில் இவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஆயுத பூஜையை தனது சொந்த ஊரில் கொண்டாடிய மணிமேகலை கணவர் உசேனுடன் தனது வாகனங்களுக்கு பூஜை போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கார், டூவீலர்: விஜே மணிமேகலை தங்களுக்கு சொந்தமான சொகுசு காருக்கும், டூவீலருக்கும் பூஜை போட்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். "அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.. Celebrating this Year at HM Land. Wishing only the best & Good things for all of us" என வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஜல்லி இயந்திரம்: கார், டூவீலரை தாண்டி ஜல்லி இயந்திரத்துக்கும் பூஜை போட்டு வாழை மரம் எல்லாம் கட்டி அமர்க்களப்படுத்தி கொண்டாடியுள்ளார் மணிமேகலை. அவருடைய ஆயுத பூஜை கொண்டாட்டத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யவம்சம் சரத்குமார் போல கடகடவென முன்னேற்றம் சூப்பர் அக்கா என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி பக்கம் வருவாரா?: மரியாதை இல்லாத இடத்தில் மணிமேகலைக்கு இடமில்லை என கோபத்துடன் வெளியேறிய மணிமேகலை பிக் பாஸ் வீட்டுக்கு வரத்தான் சீன் போடுகிறார் என ட்ரோல்கள் பறந்தன. ஆனால், அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை பங்கேற்கவில்லை. மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது.



Click it and Unblock the Notifications











