ராவணா நானும்...என் பிரபுவும் ஈருடல் ஓருயிர்... புரிந்துகொள்!
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் ராவணன் சீதா தேவியை சிறைப் பிடித்து அசோக வனத்தில் வைத்துள்ளான்.
அசுரர்களில் ஆண்களும், பெண்களுமாக சீதா தேவிக்கு காவல் இருக்கிறார்கள்.இராவணன் தன்னை சந்திக்க வந்து தன்னை அவனுக்கு அடி பணிய சொல்லும் போதெல்லாம்...
உன்னால் என்னை பணிய வைக்க முடியாது ராவணா...அதுவும் இந்த சிறு புல்லைத் தாண்டி என்னை நெருங்க நினைத்தாலே பஸ்பமாகி விடுவாய் என்று தேவி எச்சரிக்கிறார்.

பாலம் அமைத்து
இலங்கைக்கு செல்ல வானர படைகள் அனுமன், சுக்ரீவன் தலைமையில், ராமர் பாலமும் அமைத்தாயிற்று .இப்போது சீதா தேவியைக் காண எதிர் வரும் ராவணன் படைகளை வீழ்த்தி சென்று அன்னை சீதா தேவியை ராமன் காப்பாற்ற வேண்டும்.

இலங்கையில் பிரபு
முதலில் பிரபு ஸ்ரீராமர் சீதா தேவியை மீட்க இலங்கைக்கு வந்து விட்டாரா என்கிற செய்தியை அன்னைக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அடையாளமாக உங்களுக்கும், அன்னைக்குமே தெரிந்த ரகசிய பொருள் ஒன்றை தாருங்கள் பிரபு. அன்னையிடம் கொண்டு சேர்த்து அவரது நம்பிக்கையை மேலும் உரமாக்குகிறேன் என்று அனுமன் கேட்கிறான்.

ருத்திராட்ச மாலையை
ஸ்ரீராமரும் ருத்திராட்ச மாலையை கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறார். தேவியிடம் சேர்க்க அதை தனது தந்தை வாயு தேவனிடம் கொடுத்து அனுப்புகிறார் அனுமன்.

ஸ்ரீராமரின் தலை
இங்கு பெரிய தாம்பூலத் தட்டில் துணியால், மூடி பணிப்பெண் ஒரு தட்டை ஏந்தி வர... அங்கே ராவணன் வருகிறான். சீதா மூடி இருக்கும் இந்த தட்டில் உள்ளதை பார். உன் ராமனின் தலை துண்டாகி உள்ளது என்று கூறுகிறான்.

கண்கள் கலங்க சீதா
கண்கள் கலங்கி சீதா தேவி மெதுவாகப் பார்க்க, லட்சுமணன் அசந்து தூங்கிய நேரத்தில் என்னுடைய ஆள் உன் மணவாளனின் தலையை கொய்து வந்துவிட்டான் என்று கூற,அன்னை சீதா தேவி பெருமூச்சு விடுகிறார்.

பொய் சொல்கிறாய்
ராவணா.. இது என் பிரபுவின் தலை இல்லை. லட்சுமணன் எப்போது என் பிரபுவுடன் வனத்துக்கு கிளம்பினாரோ அப்போது ஆறு மாதமானாலும் தான் அண்ணனையம் என்னையும் கண்
உறங்காமல் காப்பேன் என்று சபதம் பூண்டார். எனவே, லட்சுமணன் உறங்கினான் என்று கூறுவது நீ சொல்லும் முதல் பொய்.

அனுமன் அடுத்து
அனுமன் மாவீரன்..உன்னுடைய அசுரர்களையும அழித்து என்னைக் கண்டு, போகும் போதும் உன் சேனைகளை கொன்றவன். அப்படிப்பட்ட அனுமனை மீறி பிரபுவின் தலையை உன்னால் கொண்டு வர முடியுமா? இது ரெண்டாவது பொய்.

வில் அம்பு
உன்னுடைய மூன்றாவது பொய் என் பிரபுவின் வில், அம்பு என்று என்னிடம் நீ காட்டியது என் பிரபுவோடது அல்ல..இப்படி நீ ஐந்து பொய்களை கூறி உள்ளாய் என்று சீதா தேவி தைரியத்துடன் பேசுகிறார்.இராவணன் விக்கித்து நிற்கிறார்.

முக்கியமான பொய்
ராவணா நீ கூறியதில் மிக முக்கியமான பொய்... நானும் என் பிரபுவும் ஈருடல், ஓருயிர். அப்படி இருக்கையில் எப்படி அவரை என்னிடமிருந்து பிரிக்க முடியும் என்றும் ஒரு கேள்வி கேட்கிறாள் சீதா பிராட்டி.


Click it and Unblock the Notifications











