மனசு கலைஞ்சு கிடக்கு சின்னய்யா... ரொம்ப தூரம் போயிட்டேன்...!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் குல சாமி கோயிலுக்கு படையல் போடும் விஷயத்தில், விவகாரமா ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
குலசாமி கோயிலுக்கு குடும்ப நலனுக்காக செம்பாவை ஊருக்கு அழைச்சுட்டு வர வேணாம்னு குருஜி சொல்லிடறாராம்.
இதை செம்பாகிட்ட எப்படி சொல்றதுன்னு தவிக்கறான் புருஷன் கார்த்திக்.

கனவில் செம்பா
செம்பா சொந்த கிராமத்துக்கு போற ஆசையில், அந்த கிழவி உயிரோட இருக்குமா, இந்த மளிகைக் கடைக்கார அண்ணாச்சி எப்படி இருக்காரோ தெரியலை... எல்லாரையும் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்கப் போறேன்னு கனவில் இருக்கா.

செம்பா ராஜகுமாரி
இந்த கனவுல மிதந்த செம்பாவை நீ வரக்கூடாதுன்னு குருஜி சொல்லிட்டாராம் செம்பான்னு கார்த்திக் சொல்ல ஹாலில் உட்கார்ந்து ரொம்ப அழ ஆரம்பிச்சுடறா. என் ராஜகுமாரி இல்ல...வா ரூமுக்கு போலாம்னு கார்த்திக் சொல்றான்.

அப்பா மாதிரி
சின்னய்யா என் அப்பா கூட இப்படித்தான் ராஜகுமாரின்னு கொஞ்சுவார்... அப்பா நினைவு.. ஊர் நினைவுக்கு ரொம்ப தூரம் என் மனசு போயிருச்சு சின்னய்யான்னு சொல்லி அழறா.

கலைஞ்சு கிடக்கு
ஊர் நினைவுல ரொம்ப தூரம் போயிட்டேன் சின்னய்யா... இப்போ திடீர்னு கிளம்பி வான்னு சொன்னா அப்படி சின்னய்யா... என் மனசு கலைஞ்சு கிடக்கு சின்னய்யா... இதை எப்படி நான் தங்குவேன்னு பச்சைப் புள்ளை மாதிரி அழறா செம்பா.


Click it and Unblock the Notifications











