ரொம்ப சிம்பிள்.... என்னையும் சின்னய்யா....ப்ளீஸ்!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கார்த்திக் செம்பாவை விட்டுட்டு இன்டர்வியூக்காக மும்பை போறான்.
செம்பா கிராமத்துக்கு போயிட்டு வந்ததிலிருந்து வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. புருஷன் கார்த்திக் மட்டும்தான் இப்போதைக்கு ஆறுதல்.
மும்பைக்கு தனியா விட்டுட்டு போனால் இங்கே நான் மட்டும் எப்படி தனியா இருப்பேன்னு கோவத்தில் இருக்கா செம்பா.

எப்படி செம்பா
நான் போறது வேலைக்காக...எப்படி செம்பா உன்னை அழைச்சுட்டு போக முடியும். அதுவும் உனக்கு தேவை இல்லாத அலைச்சல் செம்பா. சொல்றதை கேட்க மாட்டியான்னு கார்த்திக் கேட்கறான்.

பிரஷ் பேஸ்ட்
செம்பா பிரஷும், பேஸ்டும் எடுத்து வச்சியான்னு கேட்கறான்...இதோ வச்சிருக்கேன் பாருங்க சின்னய்யா... அந்த பிரஷ் , பேஸ்ட் மாதிரி என்னையும் ஓரு மூலையிலே வச்சு அழைச்சுட்டு போங்க சின்னய்யான்னு கெஞ்சறா. இப்போ நான் என்ன செய்தால் என் மகாராணி சந்தோஷப் படுவான்னு கேட்கறான் கார்த்திக்.

என்னையும் கூடவே
ரொம்ப சிம்பிள் சின்னய்யா... என்னையும் உங்க கூடவே கூட்டிகிட்டு போங்க சின்னய்யா அது போதும்னு சொல்றா... என் கண்ணம்மா புரிஞ்சுக்கோ... அப்பா மனசு கலக்கத்துல இருக்கார். இப்போ உன்னை என் கூட அழைச்சுக்கிட்டு போனா... செம்பாவுக்கு இங்கே இருக்க இஷ்டம் இல்லை... நானும் நீ சொல்றதை நம்பிட்டேன்னு அப்பா தப்பா நினைச்சுக்குவார் செம்பான்னு சொல்றான்.

சின்னய்யா சரி
சரி சின்னய்யா...நீங்க போயிட்டு வாங்க...நான் பெரிய அய்யாகிட்ட பேசினா ரெண்டு பேருக்குமே இனியான நாட்கள் நிம்மதியா இருக்காதுன்னுதான் ஒதுங்கி இருக்கேன் சின்னய்யா...பெரிய அய்யா தப்பா நினைச்சுக்கமா இருக்கணும்னா நான் இங்கேயே இருந்துக்கறேன் சின்னய்யான்னு சொல்றா.

ரெண்டாவது மருமகள்
முதல் மருமகள் அர்ச்சனாவும், ரெண்டாவது மருமகள் வடிவும் மாமனாருடன் பேசாமல் செம்பா இருக்கும் இந்த சமயத்தை பயன்படுத்தி,கடைசி மருமகள் செம்பாவை மாமனாரிடம் இருந்து நிரந்தரமா பிரிக்க ஐடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க. பாவம் செம்பா....


Click it and Unblock the Notifications











