செம்பருத்தி சீரியல் கார்த்திக்… ஹீரோவாக நடிக்கும் முதல் படம்… படப்பிடிப்பு தொடங்கியது !

சென்னை : செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜ், கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார்.

கார்த்திக் ராஜ் 2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார்.

சமீபத்தில் கார்த்திக் ராஜ் தன்னை எந்த திரைப்படத்திலும் நடிக்கவிடாமல் சிலர் சதி செய்வதாக குற்றம்சாட்டி இருந்தார்.

செம்பருத்தி

செம்பருத்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருந்து வரும் ஒரு சீரியல் ஆகும். இதற்கு மிக அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது வரை கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை தொட இருக்கும் இந்த சீரியலில் முக்கிய ரோலில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அந்த தொடரில் அவர் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் ஆதி மற்றும் பார்வதியின் காதல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் ஜீ5 தயாரித்த முகிலன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

வெளியேறினார்

வெளியேறினார்

இதையடுத்து, அந்த தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் வெளியேறினார். இதனால், அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சீரியலிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் தன்னை எந்தத் திரைப்படத்திலும் நடிக்க விடாதபடி சிலர் சதி வேலை செய்து கொண்டிருப்பதாக இவர் குற்றம் சாட்டி இருந்தார்.

ரசிகர்கள் உதவி

ரசிகர்கள் உதவி

சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை தொடங்கிய இவர், ரசிகர்களின் ஒத்துழைப்போடு படத்தை முடித்துக் காட்டுவேன் என்று சபதமிட்டு ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டிருந்தார். அவருக்கு பல ரசிகர்கள் உதவி செய்தனர். இதையடுத்து தற்போது படத்தை தொடங்கி உள்ளார்.

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

இந்நிலையில், நடிகர் கார்த்திக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் திரைப்படத்தின் முதல் ஷெட்யூலைத் தொடங்கிவிட்டோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X