Don't Miss!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- News
சர்ச்சை.. பிரதமர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத மத்திய அமைச்சர்! மனோ தங்கராஜ் கண்டனம்
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘செம்பருத்தி’ சீரியல் நடிகை வனஜா… இன்ஸ்டாவில் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் செம்பருத்தி. ஒரு காலகட்டத்தில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்த இந்த சீரியல் தற்போது ரம்பமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வனஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். அப்படி என்ன போட்டோவை போட்டு இருக்காங்கனு பார்க்கலாமா ?
ராதிகாகிட்ட
தொடர்ந்து
கேட்ட
விஜி
சந்திரசேகர்...
எதுக்குன்னு
பாருங்க

செம்பருத்தி
செம்பருத்தி சீரியலின் ஆரம்பத்தில் பார்வதி, ஆதியின் காதல் ரொமான்ஸ் பார்த்து குதூகலமான ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடினார்கள். ஆனால், ஆதியாக மக்கள் மனதில் பதிந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு செம்பருத்தி சீரியலின் டி ஆர் பி ரேட்டிங் பயங்கரமாக அடி வாங்கியது. ட்ரெண்டிங்கில் இருந்த செம்பருத்தி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

சுவாரசியம் இல்லை
ஆதியாக சின்னத்திரையில் களமிறங்கிய தொகுப்பாளர் அக்னி தன் நடிப்பு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது ஓரளவு ரசிகர்களை கொண்டு சீரியல் சுமாராக ஓடிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் முன்பு இருந்த சுவாரசியம் இல்லை.

டுபாக்கூர் வில்லி
இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் வனஜா. வில்லி என்றதும் நீலாம்பரி ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டாம். இவர் ஒரு டுபாக்கூர் வில்லி. அகிலாண்டேஸ்வரி வீட்டிலேயே இருந்துக்கொண்டு அந்த குடும்பத்தை கெடுக்க பல திட்டம் போடுவார். ஆனால்,பார்வதி அதை எப்படியாவது தடுத்துவிடுவார். இதுதான் 4 வருஷமா நடக்குது.

மாஸ்டர் பிளான்
கடந்த வாரத்தில் கூட அகிலாண்டேஸ்வரி மருத்துவனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். கால பைரவா கடவுளுக்கு விரதம் இருந்து பூஜை செய்தால் அவரைக் காப்பாற்றி விடலாம் என்று ஒரு சாமியார் சொல்ல, இடையில் வனஜா புகுந்து, பார்வதியை பூஜை செய்யாமல் தடுத்து பல அட்டகாசங்களை செய்தார். ஆனால், பார்வதி கடவுளிடமே சண்டைப் போட்டு அகிலாண்டேஸ்வரியை காப்பாற்றினார். கடைசியில் வனஜாகாவின் மாஸ்டர் பிளான் புஸ்ஸானது.

செம பிஸி
என்னத்தான் டுபாக்கூர் வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கு. செம்பருத்தி சீரியலில் வனஜாவாக நடிக்கும் லக்ஷிமியின் பேசும் தோரணையும், அவரின் அசத்தலான நடிப்பையும் பலர் ரசித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் லக்ஷமி சோஷியல் மீடியாவில் புகைப்படத்தை பகிர்வது, ரீல் வீடியோ போடுவது என செம ஆக்டிவாக இருக்கிறார்.

இவ்வளவு பெரிய மகனா?
லக்ஷமி சமீபத்தில் தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி,மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் லக்ஷமியின் தோலுக்கு மேல் வளர்ந்து வாட்டசாட்டமாக ஹீரோபோல இருக்கிறார் அவரின் மகன். இந்த புகைப்படத்தைப்பார்த்த பலர் , அட உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா நம்பவே முடியலையே என கேட்டு வருகின்றனர். ஒரு சிலர் நீங்க வில்லியா இருந்தாலும்.. மகன் ஹீரோ போல இருக்கிறான் என்று கருத்துக்கூறி வருகின்றனர்.