அப்பாவானாலும் அதையும் சேர்த்து செய்வேன்: கமலை நெகிழ வைத்த சென்றாயன்

By Siva

சென்னை: தந்தையாகப் போகும் சென்றாயன் கமலுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாஸன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றே பேசுவதாக குற்றச்சாட்டு இருந்தது. மகத்தை தாளிக்கப் போகிறேன் என்று அவர் கூறியபோது கூட யாருக்கும் அவர் மீது நம்பிக்கை வரவலில்லை.

அவர் தாளிச்சதை கண்ணால் பார்த்த பிறகே கமல் நம் பக்கம் சேர்ந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.

மனைவி

மனைவி

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சென்றாயனின் மனைவி கயல்விழி தான் கர்ப்பமாக இருப்பதை கூறியதை கேட்டு அந்த மனுஷன் கொடுத்த ரியாக்ஷன் கொஞ்சம் ஓவராக இருந்தது. சென்றாயனின் ரியாக்ஷன் நமக்கு மட்டும் அல்ல கமலுக்கும் ஓவராகவே தெரிந்துள்ளது. ஆனால் பிள்ளை பிறக்கப் போகும் பாசம் என்பதால் நாம் எப்படி அதை பெரிது படுத்தவில்லையோ கமலும் அப்படியே செய்துள்ளார். அடடே கமல் சார்.

பாடல்

பாடல்

சென்றாயன் குதித்தபோது ஆங்கில பாட்டே பாடிவிடுவார் என்று நினைத்தேன் என்றார் கமல். இதை கேட்ட சென்றாயனோ மனைவி சொன்னதை கேட்டவுடன் கன்ட்ரோல் இல்லாமல் போய்விட்டது சார் என்றார். கன்ட்ரோல் இல்லை என்பது மட்டும் எங்களுக்கு தெரிந்தது என்று பார்வையாளர்களை போன்றே பேசினார் கமல். மனைவியை கட்டிப்பிடிக்கும்போது அவரை கீழே தள்ளிவிட்டுவிடுவீர்களோ என்று எங்களுக்கு பதட்டமாகவே இருந்தது என்றார் கமல்.

குழந்தை

குழந்தை

எனக்கு கல்யாணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்காவது விசேஷத்திற்கு சென்றால் ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தள்ளிப் போட்டிருக்கிறீர்களா?. அந்த ஆஸ்பத்திரிக்கு போங்க, இந்த கோவிலுக்கு போங்க என்று பலரும் அறிவுரை வழங்கியதாக சென்றாயன் கமலிடம் கூறியதை கேட்கவே பாவமாக இருந்தது. ஊர்க்காரங்கன்னா அப்படித் தான் பேசுவாங்க. அதை எல்லாம் காதில் வாங்கக் கூடாது சென்டு.

வாக்குறுதி

வாக்குறுதி

மனைவி கர்ப்பமாக இருப்பது தெரியாதபோது ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்தெடுப்பேன் என்று கமலிடம் வாக்குறுதி அளித்தார் சென்றாயன். இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமானது தெரிந்த பிறகும் அவர் மாற்றிப் பேசவில்லை. மாறாக கொடுத்த வாக்குறுதிப்படி ஒரு குழந்தையை தத்தெடுப்பதாக மீண்டும் கமலிடம் கூறி மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் சென்டு.

கர்ப்பம்

கர்ப்பம்

கயல்விழி தான் கர்ப்பமாக இருப்பதை கேட்ட சென்றாயன் தலைகால் புரியாமல் குதித்தார், கதறினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அப்படி என்றால் அவர் கமலிடம் அளித்த வாக்குறுதிப்படி ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்க மாட்டாரோ என்று நினைத்தனர். ஆனால் தனக்கு குழந்தை பிறந்தாலும் ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்தெடுப்பேன் என்று கூறிய சென்டு பார்வையாளர்களின் கண்களுக்கு ஹீரோவாக தெரிந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X