பிக் பாஸ் வீட்டில் சென்றாயன்: இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறாரே!!
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள சென்றாயன் இப்படி மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லியுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் 4 பேர் மட்டுமே இருப்பதால் சும்மா சும்மா ஐஸ்வர்யாவின் முகத்தையே காண்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்களை வரவழைத்து பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிக் பாஸ்.
அந்த வகையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருப்பவர் சென்றாயன்.
ஐஸ்வர்யா
பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சென்றாயன் அங்கிருக்கும் நான்கு பேரும் ஜெயித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவுக்கு வெளியே ரொம்ப நல்ல பெயர் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்ட ஐஸுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சென்றாயன் பற்றிய ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களால் இந்த மனுஷன் அநியாயத்திற்கு பொய் சொல்கிறாரே என்று வியப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

கோபம்
பிக் பாஸ் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருவது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஃபினாலேவிலும் ஐஸ்வர்யாவுக்கு எதிராக பார்வையாளர்கள் அதிக அளவில் ஓட்டுகள் போட்டாலும் அதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு அவரை ஜெயிக்க வைப்பார் பிக் பாஸ் என்ற விமர்சனமே எழுந்துள்ளது.

ஏன் சென்டு?
வெளியே ஐஸ்வர்யாவுக்கு கெட்ட பெயர் இருப்பது தெரிந்தும் அவருக்கு ரொம்ப நல்ல பெயர் இருப்பதாக சென்றாயன் ஏன் பொய் சொல்லியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை ஐஸ்வர்யாவின் மனம் குளிர வேண்டும் என்பதற்காக பிக் பாஸே சென்றாயனை அப்படி சொல்ல வைத்துள்ளாரா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படாமல் இல்லை.

உண்மை
பார்வையாளர்களின் ஓட்டுகள் எல்லாம் முக்கியம் இல்லை. யாரை வெற்றி பெறச் செய்வது என்பதை பிக் பாஸ் தான் முடிவு செய்வார் என்று முன்னாள் போட்டியாளரான சினேகன் கூட தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ஐஸ்வர்யா விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பார்வையாளர்கள் மட்டும் அல்ல முன்னாள் போட்டியாளர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











