twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேனி பேச்சை கேட்டு பிராடுத்தனம் செய்து அசிங்கப்பட்ட சென்றாயன்

    By Siva
    |

    Recommended Video

    நிஜ வில்லி மும்தாஜா? இல்ல ஜனனியா?- வீடியோ

    சென்னை: டேனியின் நரித்தனமான அறிவுரையை கேட்டு அசிங்கப்பட்டுள்ளார் சென்றாயன்.

    எங்க ஏரியா உள்ள வராத டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தூய தமிழ் பேசுகிறேன் என்ற பெயரில் நம்மை கொடுமைப்படுத்துகிறார்கள். அவர்களின் தமிழை கேட்டால் தமிழ் மெல்ல அல்ல தற்போதே செத்துவிடும்.

    இந்நிலையில் சோப்பு டாஸ்க் கொடுத்தார்கள். அடேங்கப்பா, என்ன ஒரு அறிவாளித்தனமான டாஸ்க், சான்ஸே இல்ல.

    சோப்

    சோப்

    ஒவ்வொரு அணியிலும் ஒருவர் சோப்பை தங்கள் உடம்பில் வேகமாக தேய்த்து கரைக்க வேண்டும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வசமாகிவிடும் பாத்ரூம். அதன் பிறகு பாத்ரூமை பயன்படுத்த விரும்புவோர் ஜெயித்தவரிடம் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டுமாம். எப்பா, என்ன ஒரு கஷ்டமான டாஸ்க். என்ன ஒரு அருமையான பரிசு.

    சென்றாயன்

    சென்றாயன்

    எப்படி எல்லாம் சோப்பை வேகமாக கரைப்பது என்று சென்றாயனுக்கு டேனி, ஜனனி, ஐஸ்வர்யா, பொன்னம்பலம் ஆகியோர் ஐடியா கொடுத்தனர். அதிலும் தலையில் உப்பை போட்டுக் கொண்டு சென்று சோப்பை தேய்த்தால் சீக்கிரம் கரையும் என்ற பொன்னம்பலத்தின் ஐடியாவை என்ன சொல்ல. டேனியோ சென்றாயா உன் நகங்கள் பெரிதாக உள்ளதால் அதை வைத்து சோப்பை சுரண்டி கரைக்கப் பார் என்றார். ஜீன்ஸ் பேண்ட், ஃபுல் கை சட்டை போட்டு தேய் தேய்னு தேய்ச்சால் சோப்பு சீக்கிரம் கரையும் என்று பலே ஐடியா கொடுத்தார் டேனி.

    சோப்பு

    சோப்பு

    சென்றாயன் குழுவினர் போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது. இறுதியில் சென்றாயனும், மகத்தும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து சோப்பு டாஸ்கில் கலந்து கொண்டனர். தலையில் சோப்பை தேய் தேய் என்று தேய்த்தார்கள் மகத்தும், சென்றாயனும். சென்றாயன் தனது நகத்தால் சோப்பை சுரண்டி எடுத்ததால் டாஸ்கில் தோற்றார். அவர் சுரண்டிப் போட்ட சோப்பு துண்டுகள் கீழே கிடந்தும் தான் அவ்வாறு செய்யவில்லை என்று பொய் சொல்லி நடுவரான ஷாரிக்கை ஏமாற்றப் பார்த்தார் சென்றாயன்.

    ஷாரிக்

    ஷாரிக்

    இரண்டு சோப்புகளையும் பரிசோதித்த ஷாரிக் சென்றாயன் பிராடுத்தனம் செய்ததை கண்டுபிடித்து அவருக்கு குட்டு வைத்தார். சென்றாயன் பாவம் டேனி பேச்சை கேட்டு அசிங்கப்பட்டார். மகத் இந்த டாஸ்கில் நியாயமாக நடந்து கொண்டார். டாஸ்கில் மஞ்சள் அணி வெற்றி பெற்றதால் பாத்ரூம், புகைப்பிடிக்கும் அறை இனி அவர்கள் கட்டுப்பாட்டில்.

    English summary
    Bigg Boss 2 Tamil contestant Sendrayan listened to Dani and lost in soap task as he cheated. On the other hand, opponent Magath was playing fair.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X