உர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்?
சென்னை: சீரியஸாக இருக்கும் மும்தாஜையே வெட்கப்பட்டு சிரிக்க வைத்துள்ளார் சென்றாயன்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் பலருக்கு மும்தாஜை பிடிக்கவில்லை. ஹெட்வெயிட் பார்ட்டி என்று நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மகத்துக்கும், மும்தாஜுக்கும் ஆகவே ஆகாது.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு அழுக வேண்டுமானால் மும்தாஜ் மடி வேண்டும். அழுது முடித்த பிறகு அவரை பற்றி மற்றவர்களிடம் தப்புத் தப்பாக பேசுவார்கள்.
மும்தாஜ்
டாஸ்கின் போது தேவை என்றால் மட்டும் மும்தாஜ் நன்றாக பேசுகிறார், இல்லை என்றால் உம்மென்று இருக்கிறார். நான் ஒன்றும் இங்கு அடிமையாக வரவில்லை என்று கூறி மகத் மும்தாஜை கடுப்பேற்றும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சென்றாயன்
சென்றாயன் மும்தாஜை ஒரேயடியாக புகழ்ந்து பேச அவர் வெட்கப்பட்டு சிரிக்கும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. பொம்மை செய்யும் டாஸ்கின்போது மும்தாஜ் பண உண்டியலை எப்படி பொக்கிஷமாக பாதுகாத்தார் என்பதை சென்றாயன் தெரிவித்துள்ளார்.
யாஷிகா
அடுத்த வார தலைவர் பதவிக்கான களத்தில் மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் உள்ளனர். அவர்கள் சக போட்டியாளர்களிடம் பேசி அவர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் பிக் பாஸ்.
ஐஸ்வர்யா
பிக் பாஸுக்கு ஐஸ்வர்யாவை தான் பிடித்துள்ளது. அவரை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துடிக்கிறார் பிக் பாஸ் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











