twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன தான் கோபம் வந்தாலும் ஐஸ்வர்யாவிடம் இப்படியா நடப்பது சென்றாயன்?

    By Siva
    |

    Recommended Video

    ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்- வீடியோ

    சென்னை: டாஸ்கின்போது சென்றாயன் இப்படி செய்வார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

    பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள அனைவருமே போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நீங்களாக இருங்கள் என்று கமல் ஹாஸன் சொல்லிக் கூட அவர்கள் கேட்கவில்லை.

    அதிலும் குறிப்பாக சென்றாயனும், டேனியும் ரொம்ப போலியாக உள்ளதாக தொடர்ந்து கூறப்படுகிறது.

    சென்றாயன்

    சென்றாயனுக்கு பயங்கரமாக கோபம் வரும். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டில் அவர் அப்பாவியாக நடிக்கிறார் என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பாவியாக நடித்து வந்த சென்றாயனின் உண்மையான முகம் தெரியத் துவங்கியுள்ளது. டாஸ்கின் போது சென்றாயன் ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்து இழுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சும்மாவே ஐஸ்வர்யா தையா, தக்கா என்று குதிப்பார். இதில் சென்றாயன் முடியை பிடித்து இழுத்தால் சும்மாவா இருப்பார்.

    பாலாஜி

    என்ன, தலையை சீவிடுவியா என்று தாடி பாலாஜி கேட்கும் மற்றொரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சண்டையை வைத்தே இந்த வாரத்தை ஓட்டிவிடலாம் என்று பிக் பாஸ் முடிவு செய்துவிட்டார் போன்று. பொம்மை டாஸ்க் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போன்று தெரியவில்லை. ஐஸ்வர்யா சும்மா சும்மா கத்துவதை குறைத்தால் நன்றாக இருக்கும்.

    சென்டு

    நானும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே இருப்பது என்று சென்றாயன் தனது வேறு பக்கத்தை காட்டத் துவங்கிவிட்டார். யாஷிகா, பாலாஜியிடம் துணிந்து மோதியுள்ளார். வா, வா மோதிப் பார்த்துவிடலாம் என்று முடிவோடு இருக்கிறார் சென்றாயன். நீ விளையாட்டா பேசினால் நானும் விளையாட்டா இருப்பேன், நீ சீரியஸா இருந்தால் நானும் அப்படித் தான் என்கிறார் சென்றாயன்.

    மோதல்

    மோதல்

    பிக் பாஸ் போட்டியாளர்களை இப்படி தொடர்ந்து மோதவிட்டாலும் ஓவர் டோஸ் ஆகிவிடும் பாஸ். கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கலாய் என்று அனைத்திலும் கொஞ்சம், கொஞ்சம் கொடுத்தால் தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை பிக் பாஸ் எப்பொழுது தான் உணரப் போகிறாரோ?

    English summary
    Bigg Boss 2 Tamil contestant Sendrayan has shown Aishwarya and Yashika that he is no longer a meek guy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X