கொஞ்சம் கூட வாய் கூசாமல் பொய் பேசும் சென்றாயன், ஜனனி, டேனி
Recommended Video

சென்னை: சென்றாயனும், நீல நிற அணியும் பொய் மேல் பொய் பேசுகிறார்கள்.
சோப்பு டாஸ்கின்போது நகத்தை வைத்து சுரண்டியதை ஏற்க மறுத்து பொய் சொன்னார் சென்றாயன். நகத்தை வைத்து சோப்பை சுரண்டுமாறு ஐடியா கொடுத்தவர் டேனி.
சென்றாயன் சிக்கியதும் அவர் சோப்பை சுரண்டவே இல்லை என்று ஜனனி, டேனி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் அடங்கிய நீல நிற அணி தெரிவித்தது.

கேமரா
வீட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் கேமரா இருக்கும்போதே இந்த நீல நிற அணி இப்படி பொய் பேசுகிறதே. வெஷ பாட்டில் ஜனனி வெஷம் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். டேனியுடன் சேர்ந்து சென்றாயன் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். போன வாரம் தான் குழந்தையை தத்தெடுப்பேன் என்று கூறி கமலிடம் பாராட்டு பெற்றார் சென்றாயன். இந்த வாரம் பொய் பேசியதற்காக திட்டு வாங்குவார் போலயே.

பாத்ரூம்
சோப்பு டாஸ்கில் பிராடுத்தனம் செய்த சென்றாயனை பாத்ரூமை பயன்படுத்திவிட்டு படுக்கை அறையில் இருந்து டி-சர்ட் எடுக்க மிளகாய் பொடியை சாப்பிட வைத்தார் மகத். இதெல்லாம் டூ மச் மகத். தப்பு செய்துவிட்டார் தான் இல்லை என்று சொல்லவில்லை அதற்காக இப்படியா ஈவு இரக்கம் இல்லாமல் மிளகாய் பொடியை சாப்பிட வைப்பது?

மீண்டும் பொய்
டி-சர்ட் மட்டும் எடுக்க அனுமதி பெற்றுக் கொண்டு போர்வை, துண்டு என்று அவர் இஷ்டத்திற்கு பொருட்களை எடுத்து வந்த சென்றாயனை மஞ்சள் அணியினர் மடக்கிப்பிடித்தனர். அதற்கு சென்றாயனோ மகத்திடம் அனுமதி வாங்கிய பிறகே எடுத்ததாக பொய் சொன்னார். அவர் சொன்ன அதே பொய்யை நீல நிற அணியினரும் தெரிவித்தனர்.

மும்தாஜ்
மஞ்சள் நிற அணி மகத்தை அழைத்து வந்து கேட்டபோது சென்றாயன் சொல்லியது பொய் என்று தெரிய வந்தது. நேற்று மட்டும் இரண்டு முறை பொய் சொல்லி அசிங்கப்பட்டுள்ளார் சென்றாயன். கமல் ஹாஸன், பிக் பாஸ், பார்வையாளர்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் சென்றாயன்.

பொன்னம்பலம்
ஜனனி வாய் கூசாமல் பொய் பேசுகிறார். பொன்னம்பலத்துடன் சேர்ந்து கொண்டு மகத், மும்தாஜ், வைஷ்ணவி உள்ளிட்டோர் அடங்கிய மஞ்சள் நிற அணி பற்றி புறம் பேசுகிறார். நடுவர் ஷாரிக் எதையும் கண்டுகொள்வது இல்லை என்று ஜனனியும், பொன்னம்பலமும் குறைபாடுகிறார்கள். நடுவரே தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று தில்லாக சொல்ல முடியாததால் குமுறுக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்.


Click it and Unblock the Notifications











