டேனியின் காதலியை அடுத்து மனைவியிடம் அசிங்கப்பட்ட சென்றாயன்

By Siva

Recommended Video

Bigg Boss 2 Hero Sendrayan | சென்ட்ராயன் வளைகாப்பு

சென்னை: டேனியின் காதலியை அடுத்து மனைவியிடம் பல்பு வாங்கியுள்ளார் சென்றாயன்.

பிக் பாஸ் 2 வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஃப்ரீஸ் டாஸ்க் கொடுத்து குடும்பத்தாரை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். நேற்று சென்றாயனின் மனைவி கயல்விழி மற்றும் பெற்றோர் வந்திருந்தனர்.

கயல்விழி கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து சென்றாயன் கதறி அழுதார்.

கயல்விழி

கயல்விழி

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் மும்தாஜ் மேடம் எங்கே என்று கேட்டு சென்று அவரை பார்த்தார் கயல்விழி. சென்றாயனின் அப்பா, அம்மா ஆகியோருக்கும் மும்தாஜை நன்கு தெரிந்துள்ளது. சென்றாயனின் அப்பாவோ முத்தாச்சி என்று மும்தாஜை அழைத்தது அழகு. நீ ரொம்ப பொறுமையாக பொண்ணு, நல்லா இருக்கணும் என்று சென்றாயனின் பெற்றோர் மும்தாஜை வாழ்த்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

வெள்ளந்தியாக இருந்த சென்றாயனின் பெற்றோரை பார்த்தது நம் ஊர்க்காரங்களை பார்த்தது போன்று இருந்தது. பாசம், அழுகை, சிரிப்பு, அதட்டல், பாராட்டு என்று விக்ரமன் படம் பார்த்த எஃபெக்ட் இருந்தது. என்ன தான் நகரத்தார் மாறினாலும் கிராமத்து மக்களை அவர்களின் பாசத்தை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களிடம் மனம் செல்கிறது.

நாள்

நாள்

பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் இன்றைய தேதி என்ன, நேரம் என்ன என்று அவர்களிடம் நைசாக கேட்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார் சென்றாயன். வீட்டிற்கு வருபவர்களும் ஏதாவது ஒன்றை சொல்லி மழுப்பிவிடுவார்கள். இப்படி தான் விஸ்வரூபம் 2 குழு வந்தபோது பூஜா குமாரிடம் இன்று என்ன டே என்று சென்றாயன் கேட்க அவரோ குட்டே என்றார்.

மனைவி

மனைவி

டேனியின் காதலி வந்தபோது என்னை பத்தி எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டார். அதற்கு அந்த பெண்ணா அண்ணா நீங்க எல்லோரிடமும் இதேயே கேட்கிறீர்களே என்று நோஸ்கட் கொடுத்துவிட்டார். நேற்று தனது மனைவியிடம் நாள் பற்றி கேட்கவில்லை. மாறாக வெளியே தனக்கு எப்படி பெயர் உள்ளது என்று கேட்டார். அவரோ அது எல்லாம் சொல்லக் கூடாது என்று கறாராக தெரிவித்துவிட்டார். மனைவி என்பதால் மறைக்காமல் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டார். அய்யோ சென்டு, நீங்கள் கயல்விழியிடம் பேசியது ரகசியம் இல்லை. வீடு முழுவதும் கேமராக்கள் இருப்பதை மறந்துவிட்டீர்களே.

பெற்றோர்

பெற்றோர்

கடும்போட்டி உள்ளது. கொடுக்கும் டாஸ்கை ஒழுங்காக பண்ணுங்க. எல்லாரும் நல்லா பண்றீங்க. டாஸ்கை முழுமனதோடு செய். நீ டாஸ்கில் கம்மியா தான் காமிக்கிற. அதனால் அனைவரும் உன்னை நாமினேஷன் பண்ணுவதும் அதற்காகத் தான். அதனால் டாஸ்க்கை ஒழுங்காக பண்ணு என்று கயல்விழி சென்றாயனிடம் தெரிவித்தார். சென்றாயன் நாமினேஷனுக்கான காரணத்தை கூறிவிட்டார் கயல். 3 குழந்தை பிறந்து இறந்த பிறகு மலையேறி போய் சாமி கும்பிட்ட பிறகு பிறந்த குழந்தை தான் சென்றாயன் என்று அவரின் அம்மா மும்தாஜிடம் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X