நான் முதல்வரானால் முதலில்... இதைத்தான் செய்வேன்...!
Recommended Video
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சி இமான் அண்ணாசசிக்கு வாழ்வுதான் என்கிற மாதிரி இளம் பெண்களை வைத்து நடத்தும் நல்ல நிகழ்ச்சி.
கொஞ்சம் கூட பாகுபாடு இல்லாமல் இதில் கலந்துகொள்ளும் சன் சீரியல் குடும்ப இளம் பெண்கள் அண்ணாச்சியிடம் ரொம்ப சகஜமா பேசி பழகறது பார்க்க சந்தோஷமா இருக்கு. அதேசமயம் சில நேரங்களில் லூஸ் டாக் வந்துருது.

இந்த நிகழ்ச்சியை அண்ணாச்சியை விட்டால் வேறு யார் நடத்தினாலும் நல்லாருக்காதுன்னு சொல்ற அளவுக்கு பேர் வாங்கி இருக்கார். சின்னக் குட்டீஸ் கூட எப்படி கலகலப்பாக பொழுதைப் போக்கினாரோ அதே போல இங்கும் கலகலக்க வைக்கிறார்.
இந்த வாரம் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சுமங்கலி சீரியல் குடும்பம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இளம் பெண்கள் என்ன கலாய்த்தாலும் பதிலடி கொடுத்து அசராம சமாளித்து, டக்குன்னு சுதாரிச்சு மிக அருமையாக ஷோ நடத்தறார் இமான் அண்ணாச்சி.
நீங்க முதல்வரானால் முதலில் என்ன பண்ணுவீங்கன்னு கேட்டதுக்கு, எல்லாருமே சொன்னது முதலில் குடி நீர் ர் பிரச்சனையைத் தீர்ப்போம் என்றுதான்.. அடுத்து நமக்காக, நம் வயிற்றுக்கு உணவளிக்க கஷ்டப்படும் விவசாயிகளின் கடன் சுமையை தள்ளுபடி செய்வோம் என்பதும்தான்.
விவசாயிகளுக்கு டார்ச்சர் தரும் அத்தனை விஷயங்களிலிருந்தும் விவசாயிகளை விடுவிப்போம் என்று கூறினார்கள். நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி விழிப்புணர்வுகள் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது.
இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி நல்ல மெசேஜ்களை மக்களுக்கு பாஸ் செய்யலாம். மக்களுக்குத் தேவையான சமாச்சாரங்களை அப்படியே இனிப்பு தடவி கொடுக்கும்போது நிச்சயம் கூடுதல் வரவேற்பு கிடைக்கவே செய்யும்.


Click it and Unblock the Notifications











