மதுரை முத்து வீட்டிற்கே சென்ற செந்தில் கணேஷ் ராஜலட்சுமி.. அடடே விசேஷம் இன்னும் முடியல போல!
மதுரை: நகைச்சுவை உலகைப் பொறுத்தவரை, மேடை ஏறிவிட்டால் ரசிகர்களைச் சிரிக்க வைப்பது என்பது ஒரு கலை. அந்த கலையில் மதுரை முத்து ஒரு தேர்ந்த வித்தகர். விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' முதல் சன் டிவியின் 'அசத்தப் போவது யாரு' வரை, தனது ஸ்டாண்ட் அப் காமெடி திறமையால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். சொல்லப்போனால், 'பழைய ஜோக்' தங்கதுரையுடன் இவர் இணைந்தாலே அந்த நிகழ்ச்சியே அதகளம் தான். ஆனால், நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு சோகமான பக்கமும் இருக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மதுரை முத்துவின் வாழ்க்கையில் வையம்மாள் என்பவருடனான திருமணம் ஒரு அழகான திருமண பந்தம். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. பிள்ளையார்பட்டிக்குச் சென்றபோது நடந்த துரதிர்ஷ்டவசமான கார் விபத்தில், வையம்மாள் உயிரிழக்க, மதுரை முத்துவின் உலகம் மொத்தமும் இருண்டு போனது. யாழினி ஸ்ரீ மற்றும் முத்து ஸ்ரீ ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுடன் தந்தை முத்து அடைந்த துயரம் சொல்லி மாளாது. குழந்தைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தனது வாழ்வின் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாதவர்.

இந்நிலையில், தனது இரண்டு மகள்களுக்கும் மதுரை முத்து நடத்திய மஞ்சள் நீராட்டு விழா நடத்தியது இணையத்தில் பேசு பொருளாக மாறியது. ஒரு தந்தை தன் மகள்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்பதற்கு, இந்த விழா ஒரு சிறந்த உதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். விழாவிற்கு வரும்போது, மகள்களைப் பூக்கள் அலங்கரித்த குதிரை தேரில் அமர வைத்து, தானே குதிரை தேரை ஓட்டியும் வந்தது அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மகள்களுக்காக: அம்மா இல்லாத குறையை தன் குழந்தைகள் ஒருநாளும் உணரக்கூடாது என்பதில் முத்து மிகவும் உறுதியாக இருந்தார். ராணிகளைப் போன்ற அலங்காரம், ஒரே மாதிரியான ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் எனத் தனது மகள்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து, அவர்களை ஒரு ராஜகுமாரிகளைப் போல அவர் பார்த்துக் கொண்ட விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "அம்மா பாசத்தையே மிஞ்சும் தந்தை பாசம்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முத்துவை பாராட்டச் செய்தனர்.

செந்தில் கணேஷ்: மஞ்சள் நீராட்டு விழாவின் போது கலந்து கொள்ள முடியாத பாடகர்களான ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் தம்பதியர் செந்தில் கணேஷ் குடும்பத்தினர் மதுரை முத்து வீட்டிற்குச் சென்று அவரது மகள்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் செய்தனர். இது தொடர்பான வீடியோவை மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











