அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் வன்மம், குரோதம், விரோதம்னு இத்தனை எபிசோடும் இருந்துச்சு.
இப்போ, தேவராஜ் வீட்டிலும் சென்டிமென்ட்ஸ்.. நாகப்பன் வீட்டிலும் சென்டிமென்ட்ஸ் தாண்டவமாடுது.
தேவராஜ் தங்கச்சி புருஷன் இல்லாம அண்ணன் வீட்டில் இருக்காங்க.இவங்களுக்கு ஒரு பொண்ணு. அவளை தன் பொண்ணு மாதிரி வளர்க்கறாரு தேவராஜ்.

எடுக்காதீங்க
டேய்..தங்கச்சி பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். இதை நான்தான் முன்னே நின்னு நடத்தி வைக்கணும்.. ஒரு ராத்திரி நான் லேட்டா வந்ததுமே தங்கச்சிப் பொண்ணு துடிச்சு போயிட்டா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் இந்த கத்தி கபடா தூக்காதீங்கன்னு சொல்றார்.

பொம்பளைங்களை
ஏண்டா மானத்தை வாங்கறீங்க...தேவராஜ் குறி நாகப்பன்தானே தவிர,அவங்க வீட்டு பொம்பளைங்க இல்லைடா...நாகப்பனை ஏதாவது செய்வீங்கன்னு உங்களை நம்பினா மீனுல குண்டை வச்சு வீட்டுக்குஅனுப்பி இருக்கீங்கன்னு ஆட்களை திட்டறார்.

சென்டிமென்ட்ஸ்
நாகப்பன் குளிக்க உட்கார, மனைவி குளிக்க வைக்க தயாராகறாங்க.அம்மா நீங்க போங்க..இன்னிக்கு நானும், தங்கச்சியும்தான் அப்பாவை குளிக்க வைப்போம்னு சொல்லிட்டு யாழினி வர்றா.நீ போடி..நான் என் பொண்ணுங்க கையால குளிக்கணும்னு சொல்றார்.

பிடிச்சு குடுத்தா
உங்களை எவ்ளோ ஆசையா வளர்த்தாலும், இந்த அன்புல பங்கு போட ஒருத்தன் வருவான்னு நினைக்கும்போது கஷ்டமாத்தான் இருக்கும்மான்னு ஃபீல் பண்றார் நாகப்பன். அப்பா எங்களுக்கு கல்யாணம் வேணாம்ப்பா உங்க கூடவே இருந்துடறோம்னு பொண்ணுங்க ரெண்டு பேரும் சொல்றாங்க

உங்க வயித்துல
அப்படி எல்லாம் சொல்லக் கூடாதும்மா..உங்களை சீக்கிரம் ஒருத்தன் கையில புடிச்சு குடுத்தத்தான் என்னோட மறுபிறவி உங்க வயித்துல பிறக்கும்னு சொல்றார். ஒரே ஃபீலிங்ஸ்..அழுகைன்னு சென்டிமென்ட் மூச்சு முட்டுதுங்க..
கிழக்கு வாசல் சீரியலில் வயலன்ஸா இருந்தாலும், சைலன்சா இருந்தாலும் கொஞ்சம் இல்லை அதிகமாவே தூக்கலா இருக்கு.


Click it and Unblock the Notifications











