Zee Tamil Serials: ஜீ தமிழ் சீரியல்கள் இன்றைய அப்டேட்.. கெட்டி மேளம் முதல் அண்ணா வரை!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலையில் இருந்து இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த அண்ணா, கெட்டி மேளம், பாரிஜாதம் போன்ற சீரியல்களில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கெட்டி மேளம் சீரியலில், மகேஷ், மதியை பின் தொடர்ந்து மீன் மார்க்கெட் செல்ல, மகேஷை பார்த்த மதி யார் நீ? எதுக்கு என்ன ஃபாலோ பண்ணிகிட்டே இருக்க என்று திட்டி அவனை அங்கிருந்து துரத்துகிறாள். மறுபக்கம் மகேஷ் வீட்டுக்கு வந்த லட்சுமி அவனுக்கு ஃபோன் செய்து என்ன மாப்பிள்ளை, அஞ்சலி பார்க்க வீட்டுக்கு வந்தேன், வீடு ஒரு மாதிரி இருக்கு என்று கேட்க மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். பதறி அடித்து வீட்டுக்கு ஓடிவரும் மகேஷ் ஒரு சின்ன பயர் ஆக்சிடென்ட் என்று சொல்கிறான். லட்சுமி அதிர்ச்சியாகி அஞ்சலி குறித்து விசாரிக்க அவளுக்கு ஒரு சின்ன தீக்காயம்.. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாக சொன்ன லட்சுமி உடனடியாக அஞ்சலியை பார்க்க வேண்டும் என பதறுகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

ஆனால் மகேஷ் நீங்க வர வேண்டாம் டென்ஷன் ஆயிட்டீங்க என்று சொல்லி முருகனை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். வரும் வழியெல்லாம் முருகன் சைகையில் பேசிக்கொண்டே வர மகேஷ் டென்ஷனாகிறான். ஹாஸ்பிடலுக்கு வந்து முருகனை தூரமாக நிற்க வைத்துவிட்டு டாக்டரிடம் ஏதோ பேசுவது போல் நடித்து பிறகு முருகனிடம் அஞ்சலி மயக்கத்தில் இருப்பதால் அவளை பார்க்க முடியாது என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். பிறகு மகேஷ் மீண்டும் அதே மீன் மார்க்கெட்டுக்கு மதியை சந்திக்க வர மதி மகேஷை பார்த்து கோபப்பட்டு அரிவாளை தூக்க இவன் அஞ்சலி உடனான கல்யாண போட்டோவை காட்ட மதி என்னை மறைந்திருந்து போட்டோ எடுத்து இப்படி எடிட் பண்ணி வச்சிருக்கியா என்று கோபப்படுகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா சீரியல் : லாயரை சந்தித்து கோர்ட்டில் வாதாட சொல்லி பேசி பணத்தையும் கொடுத்து விட்டு வருகிறான் சண்முகம். ஆனால்,வைஜெயந்தி லாயருக்கு போன் செய்து சண்முகத்துக்கு ஆதரவா வாதாட கூடாது என்று மிரட்டுகிறாள். அடுத்த நாள் சண்முகம் குடும்பத்தினர் கோர்ட்டில் ஒன்று கூடுகின்றனர், ரத்னா அறிவழகனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், லாயரை சரியாக வாதாடதால், சண்முகம் இந்த வழக்கறிஞரிடம் பல ஆதாரத்தை கொடுத்தேன் ஆனால், அவர் சரியாக வாதாடவில்லை. இதனால், என் தங்கைக்காக தானே வாதாடுகிறேன் என்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: புத்தம் புதிய சீரியலான பாரிஜாதம் சீரியலில் ஆலியா மானசா லீட்ரோலில் நடித்துள்ளார். சீரியலில், இசை என் ரோலில் நடித்துள்ள ஆலியா, தங்கை வர்ஷினியும் தோழியின் திருமணத்திற்கு செல்கிறாள். கல்யாண பெண் சோகமாக இருப்பதை பார்க்கிறாள். அடுத்து, சீரியல் ஹீரோ விஷால், தனது நண்பனின் காதலுக்காக அந்த பெண்ணை கடத்தி செல்கிறான். அய்யர் கல்யாண பெண்ணை அழைக்க மணப்பெண் இல்லை என்று தெரிந்து அவளின் பெற்றோர் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய, இசை அவர்களை காப்பாற்றி உங்க பொண்ணை நான் கூட்டிட்டு வரேன் என்று வாக்கு கொடுக்கிறாள். பிறகு இசை அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து அவளுடைய அப்பா அம்மாவின் நிலையை சொல்லி அவளது மனதை மாற்றி அழைத்து வந்து கல்யாணத்தையும் நடத்தி வைக்கிறாள். இதனால், விஷால் கடுப்பாகி, ஒரு காதலர்களை பிரச்சிட்ட, நீ காதலிச்சி எப்படி நாசமா போக போற பார் என்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X