ஜீ தமிழ் சீரியல்கள் 15 செப்டம்பர் 2025: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில், ஈஸ்வரமூர்த்தி துளசியை தேர்தலில் நிற்க வைக்கிறார். இதையடுத்து, வெற்றி, துளசி ஆகியோர் முதல் முறையாக பிரச்சாரத்திற்கு கிளம்புகின்றனர். இருவரும் ஒன்றாக வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டாரின் இவர்களுக்கு ஆரத்தி எடுத்து உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கின்றனர். மறுபக்கம் திவ்யா, என் அப்பாவை பழி வாங்குவதாக நினைச்சு ஈஸ்வரமூர்த்தி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு. ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு மருமகளா வந்திருக்க துளசி யாரோ ஒருத்தவங்களோட குழந்தையை முறையா தத்தெடுக்காமல் கூட கூட்டிட்டு வந்து வளர்த்துட்டு இருக்கா. இதுவா நல்ல குடும்பம்? இவங்களுக்கா நீங்க ஓட்டு போட போறீங்களா என இவர்களை அவமானப்படுத்தி பேசுகிறாள். இதையடுத்து, துளவீட்டுக்கு வர அபிராமி இந்த குழந்தை இருக்கிற வரைக்கும் நமக்கு நல்லதே நடக்காது என்று மோசமாக பேசுகிறாள். ஆனால் வெற்றி, துளசி என் பொண்டாட்டி, தியா என் பொண்ணு அவங்க ரெண்டு பேரும் இந்த வீட்லதான் இருப்பாங்க என்று அம்மாவை எதிர்த்து பேசுகிறான்.

அண்ணா : இன்றைய எபிசோடில், சண்முகம், அறிவழகன் கேஸை எடுத்து வாதாட கோட்டில் வக்கீல் போல உடைய அணிந்து தயார் நிலையில் இருக்கிறான். அந்த நேரம் வைஜெயந்தி கோர்ட்டுக்கு வர சண்முகத்துடன் வாக்குவாதம் உருவாகிறது. அதன் பிறகு வைஜெயந்தி, வக்கீல் சிவனாண்டியை சந்தித்து சண்முகத்திடம் கொஞ்சம் உஷாராக இருங்க என்று எச்சரிக்கிறாள். உடனே வழக்கறிஞர் சிவனாண்டி, நான் பெரிய வக்கீல் இதுவரைக்கும் யாரிடமும் தோற்றதில்லை, அந்த சண்முகத்தை மண்ணை கவ்வ வைக்கிறேன் என்று சவால் விடுகிறார். இன்னொரு பக்கம் வீரா மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் கல்யாணத்தில் சிவபாலனை கடத்திய ரவுடிகளை பார்த்துவிட்டு அவனை துரத்தி பிடிக்கின்றனர்.

பாரிஜாதம் : இன்றைய எபிசோடில், இசை, சுப்ரதாவை சந்தித்து கொலு பூஜை குறித்து பேசுகிறாள். ஆனால் விஷால், இவ வேண்டவே வேண்டாம் இவ ஒரு ஃபிராடு என்று இசையை தப்பாக பேச இசை அவனிடம் கோபப்பட்டு பதிலடி கொடுக்கிறாள். இறுதியாக சுப்ரதா இந்த ஆர்டரை இசைக்கு தான் கொடுக்கப் போவதாக சொல்ல விஷால் அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு இசை வண்டி பஞ்சர் என்பதால் தள்ளிக் கொண்டு செல்ல அந்த வழியாக வந்த விஷால் அவளை ஏளனம் செய்கிறான்.
மறுபக்கம் இசையின் கடையில் ப்ரியா மட்டும் இருக்க விஷாலுக்கு அடிக்கடி கிஃப்ட் அனுப்பி கொண்டே இருக்கும் மிகப்பெரிய ரசிகை ஸ்ரீஜா, அங்கு வந்து தன்னுடைய காதலனுக்கு ப்ரபோஸ் செய்யப் போவதாகவும், அதற்கேற்றபடி ஒரு கிப்ட் வேண்டும் எனவும் சொல்லி அட்வான்ஸ் பணமாக ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு செல்கிறாள். பிறகு இசை கடைக்கு வர பிரியா விஷயத்தை சொல்ல ஓகே கிப்ட் பண்ணி கொடுத்து விடலாம் என்று சொல்கிறாள். மேலும் 5 ஆயிரம் அட்வான்ஸை நீயே உன்னுடைய செலவுக்கு வச்சுக்க என்று சொல்கிறாள் பிரியா. இதையடுத்து இசை, வீட்டுக்கு பிரியாணி வாங்கி கொண்டு வருகிறாள். மேலும், தாத்தாவிற்கு பிடித்த சரக்கு பாட்டிலை கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துகிறாள்.


Click it and Unblock the Notifications











