ஜீ தமிழ் சீரியல்கள் 16 செப்டம்பர் 2025: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியல், துளசி மற்றும் தியா ஆகியோர் வீட்டை விட்டு கிளம்ப தயாரான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். வெற்றி இருவரையும் தடுத்து நிறுத்தி, மேடம் கொஞ்சம் உள்ள போங்க என்று சொல்கிறான், ஆனால் துளசி இல்ல வெற்றி இன்னமும் அவமானங்களை தாங்கிகிட்டு எங்களால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்கிறாள். வெற்றி கொஞ்ச நேரம் நான் சொல்றத கேளுங்க என்று சொல்லி சிலரை அழைக்க லாயர், பூசாரி மற்றும் ரெஜிஸ்டர் ஆகியோர் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
தியாவை தனது மகளாக சட்டபூர்வமாக தத்தெடுத்த போவதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர். அபிராமி யார் வாரிசை யார் தத்தெடுப்பது? என்று சத்தம் போடுகிறாள்.ஆனால் வெற்றி, துளசி என் பொண்டாட்டி, தியா என்னுடைய பொண்ணு அவங்க இங்க தான் இருப்பாங்க, அவங்க வெளியே போகணும்னா நானும் வெளியே போய்டுவேன் என்று சொல்லி தியாவை தத்தெடுத்து. அடுத்த நாள் பிரச்சாரத்தில் தியாவை தத்தெடுத்து கொண்டதாக சொல்ல மீனாட்சி இதை கேட்டு அபிராமியிடம் மூட்டி விடுகிறாள்.

அண்ணா: சீரியலில் இன்று நீதிபதியாக நளினி வந்து அமர வழக்கு விசாரணை தொடங்குகிறது. சண்முகம் தனது வாதத்தை தொடங்குகிறான். ஆரம்பத்திலேயே இந்த கேஸ் 10 வருஷத்துக்கு முன்னாடியே தொடங்கியது, அதனால் முதலில் நான் சௌந்தரபாண்டியை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறான். நீதிபதி நளினி எடுத்ததும் எதுக்கு அவரை விசாரிக்கணும்? அதுவும் இல்லாமல் அவர் இங்க வந்து இருக்காரா? என்று கேட்டு முடிக்க சௌந்தரபாண்டி உள்ளே என்ட்ரி கொடுக்கிறார்.
உடனே சண்முகம், என் முருகன் தான் அவரை இங்க அழைத்து வந்து இருக்கான் என்று சொல்லி சௌந்தரபாண்டியை விசாரிக்க கூண்டில் ஏற்றுகிறான். மேலும் சண்முகம் அவரிடம் உங்களுக்கு விருமனை தெரியுமா என்று கேட்க சௌந்தரபாண்டி தெரியாது என்று சொல்ல இல்ல அவரை உங்களுக்கு நல்லாவே தெரியும். 10 வருஷத்துக்கு முன்னாடியே அவரை பத்தி நீங்க பேட்டி கொடுத்து இருக்கீங்க என்று செக்மேட் வைக்கிறான். பிறகு நீதிமன்றம் சிறு இடைவேளைக்கு பிறகு கூடும் என்று ஒத்திவைக்கப்பட வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கோபப்படுகிறாள்.
பாரிஜாதம்: இசை, சுப்ரதா தேவி வீட்டிற்கு கொலு வைப்பதற்கு தேவையான பொருட்களுடன் வருகிறாள். இதெல்லாம் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்க சுப்ரதா ஒரு இடத்தை காட்ட இசை இந்த இடத்திற்கு பதிலாக இங்கே வைக்கலாம் என்று ஐடியா கொடுக்க சுப்ரதாவிற்கும் அது சரி எனப்படுகிறது இதையடுத்து இசை சுத்தியலை கேட்க சுப்ரதா மேல இருக்க ஒரு ரூம்ல இருக்கும் என்று கை காட்ட இசை ஒவ்வொரு ரூமாக சென்று சுத்தியலை தேடுகிறாள். இறுதியாக விஷால் ரூமுக்குள் செல்லும் அவள் சுற்றியலை கண்டுபிடித்து எடுத்துவிட்டு திரும்பும் போது கால்மிதி தடுக்கி வழுக்கி கீழே விழுந்து கையில் இருந்த சுத்தியல் கிட்டார் மீது பட்டு உடைகிறது. இந்த சத்தம் கேட்டு பாத் ரூமில் பாட்டு பாடிக் கொண்டிருந்த விஷால் வெளியே வந்து இசையை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளிடம் கோபப்படுகிறான்


Click it and Unblock the Notifications











